www.garudabazaar.com

குழந்தைகளுடன் சென்று பிரபல நடிகையை சந்தித்த விக்கி & நயன்! வைரல் போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நயன்தாரா &  அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்,  பிரபல நடிகை உடன் எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

Vignesh Shivan Nayanthara Met Actress Radhika Sarath kumar

Also Read | "சில பதிவுகள் உண்மை.. ஆனா".. சர்ச்சையான பழைய பதிவுகள் ‌.. Love Today பிரதீப் பரபரப்பு விளக்கம்!

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர்.

சில வாரங்களுக்கு முன்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்த பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த பதிவை விரும்பினர். மேலும் பலர் அந்த பதிவில் நயன்தாரா & விக்னேஷ் சிவனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

இந்நிலையில்  விக்னேஷ் சிவன் & நயன்தாரா தங்களது இரட்டை குழந்தைகளுடன் நடிகை ராதிகாவை சந்தித்துள்ளனர்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவன் & நயன்தாரா எடுத்த  புகைப்படத்தை வெளியிட்டு, "அழகான குழந்தைகள்,  அற்புதமான பெண்ணான நயன்தாரா & விக்னேஷ் சிவன் உடன்  சுவையான தேநீர் நேரம். மேலும் அவர்களுக்கு பலமும் சக்தியும் கிடைக்கட்டும்." என‌ ராதிகா பதிவிட்டுள்ளார்.

Also Read | "ஆனா சர்ப்ரைஸ்னு ஒன்னு பண்ண பாரு".. புகழ் பிறந்தநாளுக்கு பென்ஸி கொடுத்த கிஃப்ட்!

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara Met Actress Radhika Sarath kumar

People looking for online information on Nayanthara, Radhika Sarathkumar, Vignesh shivan will find this news story useful.