நயன்தாராவுடன் திருமணம் எப்போ? எங்க? அதிகாரபூர்வமாக அறிவித்த விக்னேஷ் சிவன்! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கினார். அதன்  பின் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி படங்கள் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

Vignesh Shivan Nayanthara Marriage Press Meet Video

Also Read | பிரபல STAR போட்டோகிராபருடன் இணைந்த நடிகை சமந்தா.. ரசிகர்களை கவர்ந்த LATEST போட்டோஷூட் PHOTOS

அதன் பின்னர் ரீ என்ட்ரி ஆகி ராஜாராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டார்.  இவர் கடைசியாக தமிழில் நெற்றிக்கண், அண்ணாத்த படங்களில் காணப்பட்டார்.

Vignesh Shivan Nayanthara Marriage Press Meet Video

அதேபோல 'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அவர் கடைசியாக இயக்கியிருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி  இருந்தது. இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Vignesh Shivan Nayanthara Marriage Press Meet Video

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றித் திரியும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் கூட, இருவருமாக இணைந்து திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களும், பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

Vignesh Shivan Nayanthara Marriage Press Meet Video

Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் மேடையில் விருது வென்றிருந்த விக்னேஷ் சிவன், விரைவில் திருமணம் குறித்த தகவலை வெளியிடுவோம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் வரும் ஜூன் மாதம், 9 ஆம் தேதியன்று, விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளதாக இன்று (07.06.2022) பத்திரிக்கையாளர் சந்திப்பில் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். நெருங்கிய உறவினர்கள் & நண்பர்கள் இந்த நிக்ழ்வில் கலந்துகொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | பாலகிருஷ்ணா - ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஆக்சன் படம்.. வெளியான முதல் GLIMPSE போஸ்டர்!

நயன்தாராவுடன் திருமணம் எப்போ? எங்க? அதிகாரபூர்வமாக அறிவித்த விக்னேஷ் சிவன்! வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara Marriage Press Meet Video

People looking for online information on Nayanthara, Vignesh shivan, Vignesh Shivan Nayanthara Marriage, Vignesh Shivan press meet will find this news story useful.