“அதிர வைத்த சூர்யா.. அதற்கான நன்றி அடுத்த படத்தில்”… 5 மொழிகளில் பேசிய கமல்… வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Kamalhaasan thanksgiving speech regards vikram success

Also Read | ஆந்திரா & தெலங்கானாவில் செம்ம Opening… ‘விக்ரம்’ 3 நாள் வசூல்…. வெளியான ‘மாஸ்’ தகவல்

விக்ரம் ரிலீஸ்…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி  ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

Kamalhaasan thanksgiving speech regards vikram success

வெற்றி…

வெளியானது முதல் ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது விக்ரம். குறிப்பாக நடிகர்கள் கமல், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்று வரும் நிலையில் அமெரிக்காவில் முதல் 3 நாட்களில் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் திரைப்படம் முதல் 3 நாட்களில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ‘விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என சொல்லப்படுகிறது.

Kamalhaasan thanksgiving speech regards vikram success

நன்றி தெரிவித்த கமல்…

இந்நிலையில் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் வீடியோவில் “ வணக்கம். தரமான திரைப்படத்தை தாங்கிப் பிடிக்க, தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. தரமான நடிகர்களையும்தான். அந்த வரிசையில் என்னையும் எங்கள் விக்ரம் படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம். திரு அனிருத், திரு கிரிஷ், பிலோமின், அன்பறிவு, சதீஷ்குமார் தொடங்கி பெயர் தெரியாமல் பின்னணியில் வேலைபார்த்த உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளை பகிர்ந்தளிப்பதுதான் நியாயம். தம்பிகள் விஜய சேதுபதி, பகத் ஃபாசில், நரேன் மற்றும் செம்பன் வினோத் என வீரியம் மிக்க நடிகர் படையும் வெற்றியின் முக்கியக் காரணம்.  கடைசி 3 நிமிடங்கள் மட்டுமே வந்து திரையரங்குகளை அதிரவைத்த என் தம்பி சூர்யா, அன்பிற்காக மட்டுமே அதை செய்தார். அந்த அன்புக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாக காட்டிவிடலாம் என்றிருக்கிறேன். இயக்குனர் திரு லோகேஷ் அவர்களுக்கு சினிமா மேலும், என் மேலும் இருக்கும் அன்பு படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும், படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறாகவே இருக்கிறது. உங்கள் அன்பு தொடர விழையும் ராஜ்கமல் பிலிம்ஸின் அன்பு ஊழியன், உங்கள் நான்” எனக் கூறியுள்ளர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kamalhaasan thanksgiving speech regards vikram success

Also Read | KGF, RRR, விக்ரம் போல எதிர்பாக்காதீங்க.. "கோல்ட்" படம் வேறமாரி.. அப்டேட் கொடுத்த அல்போன்ஸ் புத்ரன்!

தொடர்புடைய இணைப்புகள்

Kamalhaasan thanksgiving speech regards vikram success

People looking for online information on Kamal Haasan, Vikram, Vikram success will find this news story useful.