பிரேமம் இயக்குனரின் அடுத்த படம் .. பிருத்வி - நயன்தாரா நடிப்பில் Gold படத்தின் செம First Look..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நிவின் பாலி மற்றும் நஸ்ரியா ஆகியோர் நடித்த "நேரம்" என்னும் படத்தின் மூலம், திரையுலகில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் அல்போன்ஸ் புத்ரன்.

Alphonse puthren next starring prithviraj and nayanthara first look

Also Read | லைகா சுபாஷ்கரனோடு ‘டான்’ Team… 25 ஆவது நாள் கொண்டாட்டம்… வைரல் புகைப்படம்

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாகி இருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அல்போன்ஸ் இயக்கிய 'பிரேமம்' திரைப்படம், கேரளத்தில் மட்டும் அல்லாமல், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வேற லெவலில் ஹிட்டடித்திருந்தது.

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் 'Gold'

நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும், அமோக வரவேற்பை பெற்றிருந்தது. மலையாள சினிமாவில் ஒரு பெஞ்ச் மார்க்காக கருதப்படும் பிரேமம் திரைப்படம், கடந்த 2015 ஆம் ஆண்டு, ரிலீஸ் ஆகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, பகத் ஃபாசிலை வைத்து 'பாட்டு' என்னும்  திரைப்படத்தை அல்போன்ஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால், கொரோனா தொற்று பேரிடர் காலம் உள்ளிட்ட சில காரணங்களால் அந்த படம் தள்ளிப் போனது.

Alphonse puthren next starring prithviraj and nayanthara first look

ரிலீஸ் ஆன போஸ்டர்

இதனைத் தொடர்ந்து, பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா ஆகியோரை வைத்து, 'Gold' என்னும் படத்தை அல்போன்ஸ் புத்ரன் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில்  அதிகம் வைரலாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, Gold படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இதன் இறுதிக்கட்ட படத்தொகுப்பு பணிகள், போஸ்டர் டிசைன், இசை, ஒலிப்பதிவு உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Alphonse puthren next starring prithviraj and nayanthara first look

இதனையடுத்து, Gold படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (06.06.2022) வெளியாகும் என அல்போன்ஸ் புத்ரன் அறிவித்திருந்தார். அதன் படி, Gold படத்தின் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா ஆகியோருடன் Gold படத்திலுள்ள எக்கச்சக்க நடிகர், நடிகைகளும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளனர்.

Alphonse puthren next starring prithviraj and nayanthara first look

Gold படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | நடிகை சுனைனா தனி ஹீரோயினாக நடிக்கும் ஆக்சன் படம்.. வெளியான மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Alphonse puthren next starring prithviraj and nayanthara first look

People looking for online information on Alphonse Puthren, Gold Movie First Look Poster, Nayanthara, Prithviraj will find this news story useful.