பாலகிருஷ்ணா - ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஆக்சன் படம்.. வெளியான முதல் GLIMPSE போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலகிருஷ்ணா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய படத்தின் கிளிம்ஸ் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Nandamuri Balakrishna Shruthi Haasan Mythri Movie Makers NBK107 First Hunt Loading

Also Read | ஆந்திரா & தெலங்கானாவில் செம்ம Opening… ‘விக்ரம்’ 3 நாள் வசூல்…. வெளியான ‘மாஸ்’ தகவல்

தற்போது 'NBK 107' என்ற புதிய படத்தை இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்க பாலகிருஷ்ணா நடிக்கிறார்.  இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 107வது படமாக உருவாகவுள்ளது.

'பலுபு' மற்றும் 'கிராக்' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய ஸ்ருதி, இயக்குனர் கோபிசந்துடன் இணைந்து பணியாற்றுவது இது மூன்றாவது முறையாகும். ஸ்ருதி ஹாசன் போக வரலெட்சுமி சரத்குமாரும் இந்த படத்தில் நடிக்கிறார்.

Nandamuri Balakrishna Shruthi Haasan Mythri Movie Makers NBK107 First Hunt Loading

போயபதி சீனு இயக்கத்தில் வெளியான 'அகண்டா' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால் பாலகிருஷ்ணா தற்போது நடிக்கும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்த படத்தை புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கன்னட நடிகர் துனியா விஜய் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

எஸ் தமன் இசையமைப்பு செய்ய, ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்கிறார். புகழ்பெற்ற எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதுகிறார், தேசிய விருது பெற்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பைக் கவனிக்கிறார் மற்றும் ஏஎஸ் பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். ராம்-லக்ஷ்மண்  சண்டை இயக்குனராகவும், இப்படத்தின் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராக சந்து ரவிபதி பணியாற்றுகின்றனர்.

Nandamuri Balakrishna Shruthi Haasan Mythri Movie Makers NBK107 First Hunt Loading

இந்நிலையில், பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளில், இப்படத்தின் முதல் வேட்டை என்ற பெயரில் படத்தின் அப்டேட் வெளிவரவுள்ளது. இதனை “NBK107 First Hunt Loading” என்று பாலகிருஷ்ணாவின் கைகள் மட்டுமே தெரியும் இந்த புதிய போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.  பாலையாவின் பிறந்தநாளில் பட அப்டேட்டை எதிர்பார்க்கும் பாலகிருஷ்ணா ரசிகர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.

Nandamuri Balakrishna Shruthi Haasan Mythri Movie Makers NBK107 First Hunt Loading

பாலகிருஷ்ணாவை தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இதனை சில நாட்களுக்கு முன் சிரஞ்சீவி டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உடன் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | KGF, RRR, விக்ரம் போல எதிர்பாக்காதீங்க.. "கோல்ட்" படம் வேறமாரி.. அப்டேட் கொடுத்த அல்போன்ஸ் புத்ரன்!

Nandamuri Balakrishna Shruthi Haasan Mythri Movie Makers NBK107 First Hunt Loading

People looking for online information on Mythri Movie Mythri Movie Makers, Nandamuri Balakrishna, NBK107, NBK107 First Hunt Loading, Shruthi Haasan will find this news story useful.