தொழிலதிபருடன் நடிகை பூர்ணாவுக்கு 'டும் டும் டும்' .. ஃபோட்டோவுடன் வெளியான திருமண தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை பூர்ணா தனது திருமணம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

Also Read | “ரெண்டு நாளைக்கு No ஃபோன்… No இண்டர்நெட்”… என்ன சொல்றாரு A.R.ரஹ்மான் வைரலாகும் பதிவு
பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. ஷாம்னா காசிம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்பெயராக பூர்ணா என்றே ரசிகர்களால் அறியப்படுகிறார்.
அருள்நிதி நடித்த தகராறு, சசிக்குமாரின் கொடிவீரன், சவரக்கத்தி உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தலைவி படத்தில் கங்கனா ரனாவத்தின் தோழியாக நடித்திருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, காப்பான், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற சினிமா படங்களிலும் நடித்துள்ளார் நடிகை பூர்ணா. கடைசியாக நடிகை பூர்ணா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான 'விசித்திரன்' படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார். தற்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் பிசாசு-2 படம் ரிலீசாக உள்ளது.
கேரளாவை சார்ந்த மலையாள நடிகையான பூர்ணா தற்போது தனது திருமண அறிவிப்பை அறிவித்துள்ளார். சானித் ஆசிப் அலி எனும் தொழில் அதிபரை கல்யாணம் செய்ய உள்ளார். நிச்சயதார்த்த புகைப்படங்களை புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து "பெற்றோரின் ஆதரவுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
சானித் ஆசிப் அலி JBS நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். துபாய் & அமீரகத்தில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
Also Read | "என்னோட உயிரின் உயிரே பிரிஞ்சிடுச்சு.." பிரபல பாடகர் மறைவால் உடைந்து போன ஹாரிஸ் ஜெயராஜ்