கல்யாணம் எப்போ??.. 1st Invitation யாருக்கு? Behindwoods விருது மேடையில் விக்னேஷ் சிவன் Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals Award மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

Vignesh Shivan exclusive behindwoods gold medals 2022

Also Read | பிரபல நடிகையின் மர்ம மரணம்.. வீட்டை பரிசோதித்த போலீசாருக்கு கிடைத்த பரபரப்பு ஆதாரம்..!

இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது மேடையில் கால் பதித்திருந்தனர். வெற்றிமாறன், செல்வராகவன், விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, வெங்கட் பிரபு, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர்.

சிறந்த பாடலாசிரியர் விருது

மேலும், இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் விருதுகளை வென்றும் அசத்தி இருந்தனர். அந்த வகையில், பிரபல இயக்குனர் மற்றும் பாடலைசிரியரான விக்னேஷ் சிவனுக்கு, காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக, இந்த ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதினை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் மற்றும் கதிரவன் ஆகியோர் வழங்கி இருந்தனர்.

Vignesh Shivan exclusive behindwoods gold medals 2022

எல்லாருக்கும் நன்றி

தொடர்ந்து, Behindwoods விருது மேடையில் பேசிய விக்னேஷ் சிவன், "லிரிக், கதை, வசனங்கள் உள்ளிட்டவற்றை எழுதுவதற்காக தான் நான் சினிமாவிற்கு வந்தேன். அது தொடர்பான வேலைக்கு விருது கிடைப்பது மிகவும் சந்தோஷம். அனிருத், யுவன் ஷங்கர் ராஜா என பல இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து பாடல்கள் எழுதி உள்ளேன். எனக்கு வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி" என தெரிவித்தார்.

அஜித் சார் லுக் பத்தி..

அதே போல, தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் குறித்தும் பேசி இருந்தார் விக்னேஷ் சிவன். மேலும், நடிகர் அஜித் குமார் குறித்து பேசிய விக்னேஷ் சிவன், "ஒரு தீவிர ரசிகனாக அஜித் சார் லுக் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் எந்த கதாபத்திரமாக இருந்தாலும், அவர் காட்சியின் தோன்றினால் நான் அதனை பார்க்க விரும்புவேன்" என கூறினார். ஹெச். வினோத் இயக்கும் படத்தை தொடர்ந்து, அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்யாணம் எப்போ?

இதனைத் தொடர்ந்து, தொகுப்பாளினி பிரியங்கா, சைகை காட்டி திருமணம் எப்போது என கேட்கவே, இதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், "கூடிய சீக்கிரம் அறிவிப்போம்" என கூற, உடனடியாக பிரியங்காவும், "என்னை அழைப்பீர்களா?" என கேட்டார். மறுகணமே விக்னேஷ் சிவனும், "உங்களுக்கு தான் முதல் அழைப்பதிழ்" என கூறினார்.

Vignesh Shivan exclusive behindwoods gold medals 2022

இயக்குனர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா ஆகியோர் காதலித்து வரும் நிலையில், ஜூன் மாதம் அவர்களின் திருமணம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி வந்தது. அதற்கேற்ப, விக்னேஷ் சிவனும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "எனக்கு அமீரை புடிக்கும், ஆனா" தயங்கி சொன்ன பாவனி.. ஆட்டம் போட்ட அமீர்.. அப்படி என்ன சொன்னாங்க?

கல்யாணம் எப்போ??.. 1ST INVITATION யாருக்கு? BEHINDWOODS விருது மேடையில் விக்னேஷ் சிவன் EXCLUSIVE வீடியோ

Vignesh Shivan exclusive behindwoods gold medals 2022

People looking for online information on Behindwoods Gold Medals 2022, Nayanthara, Vignesh shivan will find this news story useful.