Cadaver D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

47 Years of Rajinism : “கடவுளின் குழந்தை நீங்க...” - ரஜினிக்கு மகள்கள் வாழ்த்து.. Viral Pics

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 47 ஆண்டுகளாக, திரை உலகில் சூப்பர் ஸ்டார் என்னும் உயரிய அந்தஸ்துடன் விளங்கி வரும் ரஜினிகாந்த், தனது திரை பயணத்தில் இதுவரை 168 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Rajinikanth celebrates 47 years of rajinism with family

Also Read | 90'S, 2000'S சீரியல் நடிகர்களின் வைரல் Get together ஃபோட்டோ.. மலரும் நினைவுகளை பகிரும் 90'S Kids.!

பேருந்து நடத்துனராக இருந்த சிவாஜி ராவ், இயக்குனர் பாலச்சந்தர் பார்வையில் பட்டு, ரஜினிகாந்த் ஆகவும் மாறி இருந்தார்.

'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தில் அறிமுகமாகி, இன்று 'அண்ணாத்த' திரைப்படம் வரை நடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக நெல்சன் இயக்ககத்தில், ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

ஒவ்வொரு படத்திலும் ஸ்டைல், நடை, உடை என அசத்தும் ரஜினிகாந்திற்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அது மட்டுமில்லாமல், குழந்தைகள் கூட அவரது திரைப்படத்தில் வரும் வசனங்களை பேசி, அவரை போலவே ஸ்டைல் செய்தும் மகிழ்வார்கள். ஆறு முதல் அறுபது அவரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஸ்டைல் மன்னனான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரை உலகில் அறிமுகமாகி 47 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Rajinikanth celebrates 47 years of rajinism with family

இதனைக் கொண்டாடும் விதமாக, பல திரை அரங்குகள் அவரது சூப்பர் ஹிட் படங்களை மீண்டும் திரையிட்டு வரும் நிலையில், ரசிகர்களும் இதனை கொண்டாடி வருகிறார்கள். இதன் காரணமாக, #47YearsofRajinism என்ற ஹேஷ் டேக்குகள் கூட அதிகம் Trend ஆகி இருந்தது. சினிமாவில் அறிமுகமான நாள் முதல், தற்போது வரை ரஜினியின் ஸ்டைலை முறியடிக்க, இந்திய சினிமாவிலேயே யாரும் இல்லை என்று கூட சொல்லலாம்.

Rajinikanth celebrates 47 years of rajinism with family

இந்நிலையில், 47 ஆண்டுகள் நிறைவு ஆனதை கொண்டாடும் விதமாக, ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா ஆகியோரும் இதனை தந்தை மற்றும் தாயுடன் சேர்ந்து கொண்டாடி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களையும் சவுந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு புகைப்படத்தில், 47 years of Rajinism என்ற பேனரை ரஜினிகாந்த் பார்த்து கொண்டே நிற்கிறார்.

Rajinikanth celebrates 47 years of rajinism with family

மற்றொரு புகைப்படத்தில், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், கணவருக்கு பூங்கொத்து ஒன்றையும் அளிக்கிறார். இதனை பகிர்ந்த சவுந்தர்யா ரஜினிகாந்த், தனது கேப்ஷனில், "அப்பாவின் மிகப்பெரிய ரசிகர். எங்கள் குடும்பத்தின் சூப்பர்ஸ்டார்" என குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படங்கள், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | KGF புகழ் பிரசாந்த் நீல்லின் 20 ஆண்டு கால கனவுப்படம்.."NTR 31" படத்தின் மாஸ் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth celebrates 47 years of rajinism with family

People looking for online information on 47 Years of Rajinism, Rajinikanth, Rajinikanth celebrates 47 years of rajinism, Rajinikanth with family will find this news story useful.