கிரிக்கெட் ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படுபவர் மகேந்திர சிங் தோனி. இவர் அடிக்கும் ஹெலிஹாப்டர் ஷாட்கள் மிகப் பிரபலம். கேப்டனாக எந்த பரபரப்பான கட்டத்திலும் இந்திய கிரிக்கெட் அணியை கூலாக வழி நடத்திச் சென்றதால் இவருக்கு கூல் கேப்டன் என்ற பெயரும் உண்டு.

50 ஓவர் வேர்ல்டு கேப், டி20 வேர்ல்டு கப், ஆசியப் போட்டிகள் என அனைத்திலும் இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்த ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது.
எந்த இக்கட்டான நேரத்திலும் ஒரு பேட்ஸ்மேனாக களமிறங்கி ஆட்டத்தை தன் ஸ்டைலில் முடித்து பெஸ்ட் ஃபினிஸர் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார். இந்நிலையில் இன்று ( ஜூலை 7) அவருக்கு பிறந்த நாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில் 'உணர்வு' பட டீம் அவரது உருவத்தை கார்டூன் போல சித்தரித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளது. இது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
உணர்வு திரைப்பட வருகிற ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சுமன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை சுப்பு என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். சேகர் என்பவர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.