www.garudabazaar.com

''உனக்கு வேற Choice இல்ல'' - தளபதி விஜய்யின் 'பிகில்' பிரபலத்தை வாழ்த்திய பிரியா அட்லி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும் படம் 'பிகில்'. இந்த படத்தின் மூலம் 'தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு விஜய்யுடன் மூன்றாவது முறையாக இயக்குநர் அட்லி இணைந்துள்ளார்.

Priya Atlee wishes Vijay's Bigil Cinematographer Gk Vishnu

இந்த படத்தில் தளபதி விஜய், தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் இரண்டு விஜய்யும் ஒரே காட்சியில் தோன்றவிருப்பதாகவும் ஏற்கனவே எங்களுக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவின் பிறந்தநாளுக்கு இயக்குநர் அட்லியின் மனைவி பிரியா வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில், ''பிறந்த நாள் வாழ்த்துகள் விஷ்ணு. வாழ்க்கையின் எல்லா வளங்களும் பெற வாழ்த்துகிறேன். எங்களுடன் எப்பொழுதும் இருப்பதற்கு வாழ்த்துகள்( உனக்கும் வேற வழியில்ல)'' என்று குறிப்பிட்டுள்ளார்.