இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் க்ளைம்கேஸ் ஷூட்டிங் குறித்த தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உட்பட 3 போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது.
இந்நிலையில், இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளின் ஷூட்டிங் நாளை (ஜூலை.4) முதல் தொடங்கவுள்ளது. க்ளைமேக்ஸில் நடக்கும் சண்டைக் காட்சியை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது.