ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் - நயன்தாரா நடித்து வரும் படம் 'பிகில்'. இந்த படத்தை அட்லி இயக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தில் யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் விஜய் அப்பா - மகன் என இருவேடங்களில் நடிக்கிறார். மகளிர் கால்பந்து போட்டியை அடிப்படையாகக்கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் இரண்டு விஜய்யும் ஒரே காட்சியில் தோன்றுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது.