சிம்பு - PBS நடிக்கும் 'பத்து தல'.. இந்த ஊர்ல தான் ஷூட்? BTS போட்டோவுடன் வெளிவந்த அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிக்கும் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் BTS புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது.

Silambarasan TR Priya bhavani Shankar Pathu Thala Shooting Update

Also Read | "எனக்கு Training கொடுத்த கார்த்தியே குதிரைல இருந்து விழுந்து.." - ஜெயம் ரவி கலகல பேச்சு.. வீடியோ

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

2017 ஆம் ஆண்டு நியோ நோயர் வகைமையில் உருவான இந்த படம் கன்னட சினிமாவில் மிக முக்கிய அந்தஸ்தை பெற்றது. நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதை தான் இந்த படம். சிவராஜ் குமார் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் இது தான்.

ஸ்டூடியோ கிரீன் K. E ஞானவேல் ராஜா தயாரிப்பில், சில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவும், கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

Silambarasan TR Priya bhavani Shankar Pathu Thala Shooting Update

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார். கொரோனா காரணமாக பத்து தல படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில், 26.08.2021 அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் துவங்கியது. மூன்றாம் கட்ட் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்தது.

Silambarasan TR Priya bhavani Shankar Pathu Thala Shooting Update

பின்னர் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்த்த பொழுது சிம்புவின் தந்தையும் நடிகருமான டி. ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மேல் சிகிச்சைக்காக லண்டன் செல்லும் சூழல் உருவானது. இதனால் பத்து தல படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. டி. ராஜேந்தர் குணமாகி தற்போது தமிழகம் திரும்பி நலமுடன்  உள்ளார்.

இந்நிலையில் பத்து தல படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் துவங்கி உள்ளது.

மேலும் சிம்பு- பிரியா பவானி சங்கர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. 

Silambarasan TR Priya bhavani Shankar Pathu Thala Shooting Update

படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை பிரியா பவானி சங்கர் & நடிகர் மனுஷ்ய புத்திரன் இருக்கும் BTS புகைப்படமும் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து கொண்டு நடிகர் மனுஷ்ய புத்திரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பினார்.

இப்படத்தின் முன்னோட்டம் சிம்பு பிறந்தநாளுக்கு வெளியானது.  இந்த படம் வரும் டிசம்பர் 14 அன்று ரிலீசாக உள்ளது.

Also Read | Rocketry: The Nambi Effect - ‘ராகெட்ரி’ வரவேற்பு.. ரஜினியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற மாதவன் - வைரலாகும் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Priya bhavani Shankar Pathu Thala Shooting Update

People looking for online information on Pathu Thala Movie, Pathu Thala Shooting Update, Priya Bhavani Shankar, Silambarasan TR will find this news story useful.