www.garudabazaar.com

வெந்து தணிந்தது காடு படத்திற்காக களமிறங்கிய சிம்பு.. போட்டோவுடன் வந்த செம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட்டை சிம்பு வெளியிட்டுள்ளார்.

Silambarasan TR Wrapped Dubbing Work for Venthu Thaninthathu Kaadu

Also Read | லோக்கல் ரயிலில் பயணம் செய்த விஜய் தேவரகொண்டா & அனன்யா பாண்டே! இதான் காரணமா?

'மாநாடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார்.

‘வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இணைந்துள்ளது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார். ராதிகா முக்கிய வேடத்தில் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார்.

Silambarasan TR Wrapped Dubbing Work for Venthu Thaninthathu Kaadu

ஏற்கனவே இந்த படத்தின் பல லுக் போஸ்டர்கள் & முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.

Silambarasan TR Wrapped Dubbing Work for Venthu Thaninthathu Kaadu

மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை டப்பிங் ஸ்டூடியோவில் டப்பிங் பேசும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

Silambarasan TR Wrapped Dubbing Work for Venthu Thaninthathu Kaadu

அந்த புகைப்படத்தில் இடம்பெற்ற காட்சியில் சிம்புவுடன் நடிகர் அப்பு குட்டி உள்ளார்.

Also Read | VIP தனுஷின் டிரேட் மார்க் ஃபைட் சீனுடன் "வாத்தி" படத்தின் தெறிக்கும் புதிய போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Wrapped Dubbing Work for Venthu Thaninthathu Kaadu

People looking for online information on Silambarasan TR, Vendhu Thanindhathu Kaadu, Vendhu Thanindhathu Kaadu Movie Updates will find this news story useful.