777 Charlie Trailer

BREAKING: வெங்கட் பிரபு படத்திற்கு இளையராஜா இசையா? கூட இந்த இசையமைப்பாளர் வேறயா! ஆஹா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநாடு, மன்மத லீலை படங்களைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் EXCLUSIVE அப்டேட் வெளியாகி உள்ளது.

Venkatprabhu VP11 Nagachaitanya project music composing with Yuvan Shankar raja illayaraja

Also Read | சீனியர் திருச்சிற்றம்பலமாக.. ஜாலியாக செம்ம டான்ஸ் ஆடிய பாரதிராஜா! வெளியான மோஷன் போஸ்டர்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி இருந்தது.டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை அனைத்து தரப்பிலான மக்களுக்கு புரியும் வகையில், நேர்த்தியாக இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு.

மாநாடு திரைப்படமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 117 கொடி ரூபாய் வசூல் செய்து பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, மிகவும் குறுகிய காலத்தில், நடிகர் அசோக் செல்வனை வைத்து அவர் இயக்கிய மன்மத லீலை திரைப்படமும், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகியது.

Venkatprabhu VP11 Nagachaitanya project music composing with Yuvan Shankar raja illayaraja

அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் அடுத்து வெங்கட் பிரபு இணையும் இருமொழி படம் குறித்த புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இணையும் அவரது 22வது படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாக உள்ளது.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும். அதே போல, தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார். நாகசைதன்யா தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஒளிப்பதிவாளர் S.R. கதிர் செயல்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Venkatprabhu VP11 Nagachaitanya project music composing with Yuvan Shankar raja illayaraja

ஜூன் 23 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தின் பாடல் பதிவு சென்னையில் துவங்கி உள்ளதாகவும், இப்படத்தில் இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | அஜித் நடிக்கும் #AK61.. 47 நாள் இடைவிடாத படப்பிடிப்பு.. அடுத்தக்கட்ட ஷூட்டிங் இந்த ஊர்லயா?

தொடர்புடைய இணைப்புகள்

Venkatprabhu VP11 Nagachaitanya project music composing with Yuvan Shankar raja illayaraja

People looking for online information on Illayaraja, Nagachaitanya, VenkatPrabhu, VP11, Yuvan Shankar Raja will find this news story useful.