‘யார் இயக்கத்தில் யார் ஹீரோ..?’ - கோலிவுட்டில் இணைந்திருக்கும் புதிய காம்போ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான வெங்கட் பிரபு மற்றும் ராகவா லாரன்ஸ் புதிய திரைப்படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர்.

Venkat Prabhu to direct popular actor - director Raghava Lawrence for his next

‘சென்னை 28’, ‘சரோஜா’, ‘கோவா’, ‘மங்காத்தா’ உள்ளிட்ட சூப்பர்ஹிட் திரைப்படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல நடிகரும், நடன இயக்குநரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கிறார்.

‘முனி’, ‘காஞ்சனா’ போன்ற சூப்பர் ஹிட் காமெடி படங்களை வழங்கியிருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் முன்னணி இயக்குநரின் திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நமக்கு கிடைத்த தகவலின்படி, வெங்கட் பிரபு கூறிய கதையின் ஒன்லைன் பிடித்து போகவே லாரன்ஸ் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டதாகவும், ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ஹாட்ஸ்டார் வெப் சீரிஸ் ஒன்றை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். மேலும் வைபவ் நடிக்கும் ‘லாக்கப்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இது தவிர, சிம்பு நடிப்பில் உருவாகவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் பணிகளையும் விரைவில் தொடங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.