நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரில் பண மோசடி ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 28, 2019 12:10 PM
'காஞ்சனா 3' படத்தின் வெற்றிக்கு பிறகு 'காஞ்சனா' படத்தின் முதல் பாகத்தை ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் ரம்ஜானை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. நடிகர் ராகவா லாரன்ல் பல்வேறு பொது சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் பெயரில் போலியான சமூக வலைதளபக்கம் மூலம் பெங்களூரு, ஊட்டி, சேலம், சென்னை போன்ற இடங்களில் சிலரிடம் வீடு கட்டித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்துள்ளனர்.
இதனை அறிந்த பிறகு ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை மன்றம் சார்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில், மோசடி செய்தவர்கள் லாரன்ஸ் மீது களங்கம் விளைவித்ததாகவும் அதன் காரணமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.