Breaking: இந்த போலீஸ் ஸ்டோரி பட டீஸருக்கு வாய்ஸ் ஓவர் கொடுக்கும் கௌதம் மேனன்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 11, 2019 06:07 PM
'சிக்ஸர்' படத்துக்கு பிறகு வைபவ் தற்போது 'லாக்கப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வைபவுடன் வாணி போஜன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பிரபல நடிகர் நிதின் சத்யா தனது ஸ்வேத் புரொடக்ஷன் சார்பாக தயாரிக்கிறார். அரோல் குரோலி இந்த படத்துக்கு இசையமைக்கிறார். எஸ்ஜி சார்லஸ் இந்த படத்தை கதை எழுதி இயக்கியுள்ளார்.
போலீஸ் ஸ்டோரியாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்ப்டடுள்ளது. டீஸரை நடிகர் ஜெயம் ரவி வெளியிடவிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டீஸரில் இயக்குநர் கௌதம் மேனன் வாய்ஸ் ஓவர் அளித்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
Tags : Venkat Prabhu, Vaibhav, Lockup