வெங்கட் பிரபு - வைபவ் இணையும் 'லாக்கப்' படத்தின் முக்கிய அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 05, 2019 12:13 PM
'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' மற்றும் 'புலி' படங்களின் இயக்குநர் சிம்பு தேவன் 'கசடதபற' எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பாக தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் 6 ஹீரோக்கள், 6 ஹீரோயின்கள், 6 இசையமைப்பாளர்கள், 6 எடிட்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த படத்தை தயாரிப்பது மட்டுமல்லாமல் வெங்கட் பிரபுவும் ஒரு முக்கிய வேடத்த்தில் நடிக்கிறார்.
இதனையடுத்து வெங்கட் பிரபு பிரபல நடிகர் வைபவுடன் இணைந்து 'லாக்கப்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை நிதின் சத்யா தயாரிக்க எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார். அரோல் குரோலி இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது.
Tags : Venkat Prabhu, Vaibhav, Vani Bhojan, Lock Up