பிரபல ஹீரோவுடன் வெங்கட் பிரபு இணையும் படத்துக்கு டைட்டில் என்ன தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 31, 2019 06:55 PM
வெங்கட் பிரபு சிம்புவை ஹீரோவாக வைத்து 'மாநாடு' படத்தை இயக்குவதாக இருந்தது. சில காரணங்களால் அந்த படம் நடைபெற தாமதமானது. அந்த படம் சிம்பு தவிர்த்து வேறு நடிகரை வைத்து தொடங்கப்படும் என்பது போன்று அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது பிரபல நடிகர் வைபவுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை பிரபல நடிகர் நிதின் சத்யா தயாரிக்கிறார். அரோல் குரோலி இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்த படத்துக்கு லாக் அப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.ஜி.சார்லஸ் இந்த படத்தை எழுதி இயக்குகிறார். மேலும் இயக்குநர் சிம்பு தேவன் இயக்கும் கசட தபற படத்திலும் வெங்கட் பிரபு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
And this is after some huge hardwork ...... Presenting #lockup #lockuptitlelook @actor_vaibhav @vp_offl @vanibhojanoffl @shamna_kasim @SGCharles2 @ArrolCorelli @editor_mad @teamaimpr @kbsriram16 pic.twitter.com/Shzeli2fEB
— Nitinsathyaa (@Nitinsathyaa) October 31, 2019