வைபவின் 'சிக்ஸர்' படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 27, 2019 09:53 PM
வைபவ் ஹீரோவாக நடித்து வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் 'சிக்ஸர்'. இந்த படத்தை வால்மேட் எண்டர்டெயின்மென்ட் சார்பாக தினேஷ் கண்ணன், கே.ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் வைபவுடன் பல்லக் லால்வானி, சதீஷ், ராமர், ராதாரவி, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை சாச்சி எழுதி, இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் 6 மணிக்கு மேல் கண் பார்வை அற்றவராக வைபவ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பாடியுள்ள எங்க வேணா கோச்சுக்கினு போ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி திரையிடல் உரிமையை பெரும் விலைக்கு விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. இது வைபவின் படங்களிலேயே அதிக விலைக்கு சேட்டைலைட் உரிமையை பெறப்பட்டுள்ளதால், சிக்ஸர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.