வெங்கட் பிரபுவின் வெப் சீரிஸில் இணைந்த ‘பிகில்’, ‘தர்பார்’ ஸ்டார்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 22, 2019 11:41 AM
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னணி நடிகை காஜல் அகர்வால் நடித்து வரும் புதிய வெப் சீரிஸில் பிரபல காமெடி நடிகர் இணைந்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த ‘மாநாடு’ திரைப்படம் கைவிடப்பட்டதை தொடர்ந்து, வெப் சீரிஸ் ஒன்றை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் பணிகள் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த வெப் சீரிஸில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், இந்த வெப் சீரிஸில் நடிகர் வைபவ் ஹீரோவாகவும், மற்றொரு நடிகையாக கயல் ஆனந்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களை தொடர்ந்து தற்போது பிரபல காமெடி நடிகரான யோகி பாபுவும் இந்த வெப் சீரிஸில் இணைந்துள்ளார்.
இந்த வெப் சீரிஸின் ஷூட்டிங் பணிகள் தற்போது ஏற்காடில் நடைபெற்று வருகிறது. இதன் ஷூட்டிங்கில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளார். நடிகர் பிரேம்ஜியுடன் யோகி பாபு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த கதையை திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 10 எபிசோட்களை கொண்ட வெப் சீரிஸாக வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த வெப் சீரிஸ் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.