சிக்ஸர் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய "எங்க வேணா கோச்சுக்கினு போ" வீடியோ சாங் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 29, 2019 11:59 AM
வால்மேட் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வைபவ் ஹீரோவாக நடித்திருக்கும் படம் சிக்ஸர். இந்த படத்துக்கு பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பலக் லால்வானி சதீஷ், ராதா ரவி, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் வைபவ் 6 மணிக்கு மேல் கண் தெரியாத மாலைக் கண் நோய் கொண்டவராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய எங்க வேணா கோச்சுக்கினு போ என்ற பாடலும் Behindwoods தளத்தில் வெளியான பா..பா பிளாக் ஷீப் பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் பாடிய எங்க வேணா கோச்சுக்கினு போ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
சிக்ஸர் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய "எங்க வேணா கோச்சுக்கினு போ" வீடியோ சாங் இதோ! வீடியோ