www.garudabazaar.com

பிரபல OTT - யில் ரிலீஸாகும் 'வெந்து தணிந்தது காடு'.. எப்போ? எதுல? செம

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படம் பிரபல OTT-யில் ரிலீஸாக உள்ளது.

Vendhu Thaninthathu Kaadu OTT digital premiere on Amazon Prime Video

Also Read | Bigg Boss Tamil 6 : “நீங்க ஒன்னும் பிக்பாஸ் இல்ல.!” .. கிச்சனில் சீறிக்கொண்ட அசீம் - மகேஸ்வரி..!

வெந்து தணிந்தது காடு படம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தினை தமிழகம் முழுவதும்  உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சென்னை நகரில் 21 திரையரங்குகளிலும், செங்கல்பட்டு ஏரியாவில் 84 திரையரங்குகளிலும், மதுரை ஏரியாவில் 64 திரையரங்குகளிலும், திருநெல்வேலி ஏரியாவில் 27 திரையரங்குகளிலும், திருச்சி ஏரியாவில் 43 திரையரங்குகளிலும், சேலம் ஏரியாவில் 63 திரையரங்குகளிலும், கோயம்புத்தூர் ஏரியாவில் 78 திரையரங்குகளிலும், வட ஆற்காடு ஏரியாவில் 41 திரையரங்குகளிலும், தென் ஆற்காடு ஏரியாவில் 51 திரையரங்குகளிலும் வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 473 திரையரங்குகளில் இந்த படம் வெளியானது.

Vendhu Thaninthathu Kaadu OTT digital premiere on Amazon Prime Video

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் & தாமரை ஆகிய நால்வர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்தது. ஜெயமோகன் எழுத்தாளராக இந்த படத்தில் பணிபுரிந்தார்.

Vendhu Thaninthathu Kaadu OTT digital premiere on Amazon Prime Video

வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து வீரனின் (சிம்பு) வாழ்க்கை சம்பவங்களே "வெந்து தணிந்தது காடு" படமாகும்.

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு இயக்குனர் கௌதம் மேனனுக்கு விலையுயர்ந்த பைக்கும், நடிகர் சிம்புவுக்கு டுயோட்டோ காரையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசாக அளித்துள்ளார்.

Vendhu Thaninthathu Kaadu OTT digital premiere on Amazon Prime Video

இந்நிலையில் இந்த படம் நாளை அக்டோபர் 13 ஆம் தேதி பிரபல முன்னணி ஒடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | இரட்டை குழந்தை பிறப்பு.. நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த கார்த்தி!

தொடர்புடைய இணைப்புகள்

Vendhu Thaninthathu Kaadu OTT digital premiere on Amazon Prime Video

People looking for online information on Amazon Prime Video, AR Rahman, Gautham Vasudev Menon, Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu, VTK OTT digital premiere will find this news story useful.