www.garudabazaar.com

"என் ரேஞ்சே வேற".. கேமரா முன் கெத்து காட்டிய GP முத்து.. திடீர்னு வந்து பங்கம் பண்ணிய மகேஸ்வரி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

GP Muthu Self Praise VJ Maheswari sudden entry bigg boss 6

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் முக்கிய போட்டியாளராக ஜிபி முத்து கலந்துகொண்டுள்ளார். பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளராக உள்நுழைந்த ஜிபி முத்து, முதல் நாள் பயந்ததும், அவருக்கு ஆதாம், ஏவாள் உதாரணத்தை சொல்லி கமல் சமாதானம் சொன்னதும் வைரலானது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டின் கேமராவின் முன்னால் நின்று கொண்டு ஜிபி முத்து நிறையவே பேசுகிறார். எப்போதுமே இப்படி கேமராவை பார்த்தால் தனியாக பேசி சந்தோஷங்களை வெளிப்படுத்தும் ஜிபி முத்து, முன்னதாக தன்னுடைய குடும்பத்திற்கு ஹாய் சொல்லி இருந்தார். தான் ஜாலியாக இருப்பதாவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதேபோல் தற்போது கேமரா முன் நின்று ஜிபி முத்து எப்போதும் போல பேப்பர் ஐடியை கலாய்த்து விட்டு, ‘என்னுடைய டிரஸ் மட்டும் வந்து விட்டால் தன்னுடைய ரேஞ்சே வேற.. தினமும் புதுப்புது டிரஸ் போட்டு கொண்டு கலர் கலராக கலர்ஃபுல்லாக இருப்பேன்’ என கூறுகிறார். அப்போதுதான் திடீரென அங்கு எண்ட்ரி கொடுக்கும் மகேஸ்வரி, ஜிபி முத்து சற்று எதிர்பாராத வகையில் சட்டென வந்து, ‘கிச்சன் க்ளோஸ் பண்ண போறோம்’ என்கிறார்.

உடனே பதறிய ஜிபி முத்து திரும்பி பார்க்கிறார். அப்போது மீண்டும் பேசும் மகேஸ்வரி, ‘கிச்சன் குளோஸ் பண்ண போகிறோம் .. நீங்கள் வந்தீர்கள் ஆனால் உணவை முடித்துவிட்டு கிச்சன் க்ளோஸ் பண்ணி விடுவோம்’ என்று கூறுகிறார். தன் ரேஞ்சை பற்றி பேசி Vibe ஏற்றிக் கொண்டிருந்த ஜிபி முத்து, மகேஸ்வரி திடீரென வந்து கிச்சனை மூடப் போவதாக சொன்னதும் பல்ஸ் குறைந்து சென்று விட்டார். இப்படி தனக்கே உரிய இயல்பான மற்றும் கலகலப்பான பாணியில் ஜிபி முத்து, பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பது பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. தொடர்ந்து இந்த கேமை அவர் எப்படி எடுத்துச் செல்ல போகிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu Self Praise VJ Maheswari sudden entry bigg boss 6

People looking for online information on Amuthavaanan, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, Metti Oli Shanthi, Vj maheswari will find this news story useful.