Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

"இசைப்புயல் Music ஸ்கூல் பொண்ணுன்னா சும்மாவா?" - மெய்சிலிர்த்த AR Rahman.. Vibe வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Ar rahman shares video her student playing piano

பிரபல இசைஅமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மானின், KM Music Conservatory இசைப்பள்ளியில் ஏராளமானோர் இசை பயின்று வருகின்றனர்.

இங்கே இசை பயின்று வரும் பலரும், உலக அளவில் தங்களின் இசைத் திறனால், பலரது கவனத்தையும் தொடர்ந்து ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில், KM இசை பள்ளியில் பியானோ பயிலும் மாணவி ஒருவரின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ளார். பாலக் சவுஹான் என்ற இளம் பெண் ஒருவர், தனது இரண்டு கைகள் கொண்டு அப்படியே பியானோவில் உள்ள கீ போர்டில் அப்படியே இறகை வருடுவது போல, தனது விரல்கள் கொண்டு மாயாஜாலம் செய்கிறார்.

Ar rahman shares video her student playing piano

நமது கண்ணை விட வேகமாகவும், அதே வேளையில் அப்படியே நம்மை இசைக்கு மத்தியில் கட்டிப் போட்டு எங்கோ கொண்டு செல்வது போன்றும் இசையை அந்த இளம் பெண் பியானோவில் உருவாக்குகிறார். வீடியோவை பார்க்காமல், அப்படியே கண்ணை கட்டிக் கொண்டு இசையை கேட்க ஆரம்பித்தால், அப்படி ஒரு Vibe கிடைப்பதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Ar rahman shares video her student playing piano

மேலும், இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை ஒன்றில் இளம் பெண் பாலக் சவுகான் ஈடுபட்டு வருவதாவும் தனது கேப்ஷனில் ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். அப்படியே நம்மை வேறொரு உலகத்திற்கு கொண்டு செல்லும் இளம் பெண்ணின் பியானோ இசை தொடர்பான வீடியோ, நெட்டிசன்கள் பலரையும் வேற லெவலில் உற்சாகப்படுத்தியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)

 

தொடர்புடைய இணைப்புகள்

Ar rahman shares video her student playing piano

People looking for online information on AR Rahman, KM Music School, Pianist will find this news story useful.