VTK D Logo Top
www.garudabazaar.com

"இயக்குனர் சிலம்பரசன்".. படம் இயக்குவது குறித்து மனம் திறந்த சிம்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படம் இன்று செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Silambarasan TR simbhu about Directing a film

Also Read | சிம்பு நடித்த 'VTK'.. தமிழ்நாட்ல மட்டும் இத்தனை தியேட்டர்ல ரிலீசா? ஏரியா வாரியாக முழு லிஸ்ட்!

இந்த படத்தினை தமிழகம் முழுவதும்  உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.

வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து வீரனின் (சிம்பு) வாழ்க்கை சம்பவங்களே "வெந்து தணிந்தது காடு" படமாகும்.

Silambarasan TR simbhu about Directing a film

இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக  நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக எழுத்தாளராக இணைந்துள்ளார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிந்துள்ளனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Silambarasan TR simbhu about Directing a film

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸை ஒட்டி பிரத்யேக கலந்துரையாடல் நிகழ்வில் நடிகர் சிலம்பரசன் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். "மீண்டும் திரைப்பட இயக்குனராக எப்போ சிம்புவை பார்க்கலாம்?" என்ற கேள்விக்கு "50 படங்களில் நடித்த பிறகு இயக்குனராக  மீண்டும் படம் இயக்குவேன்" என சிம்பு கூறியுள்ளார்.

சிம்பு ஏற்கனவே 'வல்லவன்' படத்தை இயக்கியவர் ஆவார்.

Also Read | PS1: சோழ சிம்மாசனத்திற்கான சண்டை.. "பொன்னியின் செல்வன்" படத்தின் புதிய மெயின் கேரக்டர் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR simbhu about Directing a film

People looking for online information on Silambarasan TR, Simbhu will find this news story useful.