Buffoon D logo top
Trigger D Logo Top
Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

போடு வெடிய.. வேட்டையாடு விளையாடு-2 எப்போ?.. கவுதம் மேனன் சொன்ன சூப்பர் தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வேட்டையாடு விளையாடு -2 பற்றி பேசியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Gautham Vasudev Menon gives update about vettaiyaadu vilaiyaadu 2

வெந்து தணிந்தது காடு படம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை தமிழகம் முழுவதும்  உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 473 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக  நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

Gautham Vasudev Menon gives update about vettaiyadu vilaiyadu 2

படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கௌதம் மேனனுக்கு விலையுயர்ந்த ராயல் என்ஃபீல்டு புதிய கிளாசிக் 350 பைக்கை பரிசளித்துள்ளார். நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் GVM Fans Festival நிகழ்ச்சியில் கௌதம் மேனன் & ஐசரி கணேஷ் கலந்து கொண்ட போது இந்த பரிசளிப்பு நடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வெட்டையாடு விளையாடு - 2 பற்றி அவ்வப்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தன்னிடம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும், அந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் கவுதம் மேனன் தெரிவித்தார். இதனையடுத்து பேசிய ஐசரி கணேஷ்," வேட்டையாடு விளையாடு 2 ஆம் பாகத்திற்கான மைய கதையை நடிகர் கமல்ஹாசனிடத்தில் கவுதம் சொல்லியிருக்கிறார். முழுவதுமாக கதையை முடிவித்துவிட்டு வரும்படி சார் (கமல்ஹாசன்) சொல்லியிருந்தார். வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது கூட இரண்டு வருடமாக ஸ்க்ரிப்டை கேட்டுக்கொண்டிருப்பதாகவும் இன்னும் தனக்கு வரவில்லை என்றும் கமல் சார் கூறியிருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் உடன் இணைந்து கவுதம் மேனன் கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்" என்றார்.

Gautham Vasudev Menon gives update about vettaiyadu vilaiyadu 2

கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் வேட்டையாடு விளையாடு. ஆக்ஷன் த்ரில்லராக வெளிவந்த இந்தப்படத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இந்தப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவும், ஆண்டனி படத்தொகுப்பும் செய்திருந்தனர். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில்,இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கவுதம் மேனன் பேசியிருப்பது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Gautham Vasudev Menon gives update about vettaiyaadu vilaiyaadu 2

People looking for online information on GVM, KAMALHAASAN, Vettaiyaaduvilaiyaadu2 will find this news story useful.