Buffoon D logo top
Trigger D Logo Top
Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

PS1 : AR ரஹ்மான் & த்ரிஷா.. இணையத்தை அதிரவைத்த ஒற்றை ஃபோட்டோ..! த்ரிஷா பகிர்ந்த படுவைரல் Post.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

Trisha insta story about ar rahman gone viral

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் 1", செப்டம்பர் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இந்த படத்தின் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் வெளியான நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் மேற்கொள்ள, கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார்.

Trisha insta story about ar rahman gone viral

இந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளிலும் படக்குழுவினர் இயங்கி வருகின்றனர். சமீபத்தில், இயக்குனர் மணிரத்னம், விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

இதற்கு அடுத்தபடியாக, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Trisha insta story about ar rahman gone viral

இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் த்ரிஷா பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. முன்னால் ஏ.ஆர். ரஹ்மான் நிற்க, பின்னால் நின்ற படி அவரை பார்த்து சிரித்தபடி ரசித்து கொண்டே நிற்கிறார் நடிகை திரிஷா. மேலும், அவரது கேப்ஷனும் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Trisha insta story about ar rahman gone viral

People looking for online information on AR Rahman, Mani Ratnam, Ponniyin Selvan, Trisha will find this news story useful.