Kaateri logo top
www.garudabazaar.com

ஜெண்டில்மேனில் தொடங்கிய சகாப்தம்.. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினிமா என்பது பல கலைத்துறைகளின் சங்கமம். தொடர்பில்லாத துறைகளில் இருந்து பல திறமையானவர்களை ஒன்றிணைத்து அடையாளம் காட்டும் தொடர்பு சாதனம்.

vels university honorary doctorate to director shankar

Also Read | இளம் இயக்குனருடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு.. வெளியான புகைப்படங்கள்! பின்னணி தகவல்

இப்படிப்பட்ட துறைக்கு பிரம்மாண்டத்தின் மூத்தப் பிள்ளையாக இருக்கும் மக்கள் போற்றும் ஒரு கலைஞனாக பலராலும் பார்க்கப்படுபவர் இந்திய இயக்குநர் ஷங்கர். கும்பகோணத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தார்.

அவரது கல்லூரி நாட்களில், அவர் எழுதத் தொடங்கினார் மற்றும் கலை நிகழ்ச்சிகள் பலவற்றை நிகழ்த்தினார், இவரின் திறமை இவரை தனித்து அடையாளப் படுத்தி பல கைதட்டளையும் விருதுகளையும் கொண்டுவந்து குவித்தது. இது இவருக்கு நடிப்பு ஆர்வத்தைத் தூண்டியது. பின்னர், அவர் ஒரு நாடகக் குழுவில் சேர்ந்தார், அங்கு அவர் ஐந்து ஆண்டுகள் நன்கு பயிற்சிப் பெற்றார். இவரின் திறமை  இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் கவனத்தை ஈர்த்தது, அவர் ஷங்கரை தம் உதவியாளராக அழைத்துக்கொண்டார்.

1986 - 87-களுக்குப் பிறகு, ஷங்கர் தம் சொந்த முயற்சியில் சிறு சிறு விளம்பரப் படங்களை எடுத்து திரை இயக்குநரானார். 1993-இல் வெளியான ஜென்டில்மேன், என்கிற திரைப்படம் இயக்குனர் ஷங்கர் என்கிற ஜாம்பவானை தமிழ்த் திரையுலகத்திற்கு வெளிச்சம் போட்டது. தொடர்ந்து வெளிவந்த  காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி, எந்திரன்... என ஷங்கர் எடுத்த பல திரைப்படங்கள் வணிக ரீதியாக மாபெரும் வெற்றிபெற்றன.

vels university honorary doctorate to director shankar

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளையதளபதி விஜய், விக்ரம் என இன்றைய திரை உலகின் மாஸ் ஸ்டார்களை இயக்கி வெற்றிமேல் வெற்றி சூடியவர்.  இவரது படங்கள் மாநில விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் என அனைத்துத் தரப்புகளிலும் விருதுகளை வென்றுள்ளன.

இந்நிலையில், இன்றைய இளைய தலைமுறையினருக்கும் நாளைய படைப்பாளர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கிவரும் தமிழ் சினிமாவின் பிரமாண்டப் பெருமிதம் எப்போதும் தமது இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி பறக்க நினைக்கும் கலைஞன்  தயாரிப்பாளராகயும் பரிமாணங்களைப் பெற்ற இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

Also Read | 'PS1' படத்தின் இறுதிக்கட்ட இசையமைப்பு பணிகள்.. A.R.ரஹ்மான் கொடுத்த சூப்பர் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

vels university honorary doctorate to director shankar

People looking for online information on Shankar, Shankar shanmugam will find this news story useful.