Kaateri logo top
www.garudabazaar.com

'PS1' படத்தின் இறுதிக்கட்ட இசையமைப்பு பணிகள்.. A.R.ரஹ்மான் கொடுத்த சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்டை ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

Ponniyin Selvan Movie A R Rahman Dolby Atmos Music Mixing

Also Read | இவங்க தான் சோழர்களா? LYCA வெளியிட்ட PS1 பொன்னியின் செல்வன் படத்தின் BTS!

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

Ponniyin Selvan Movie A R Rahman Dolby Atmos Music Mixing

சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், டீஸர் & முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

Ponniyin Selvan Movie A R Rahman Dolby Atmos Music Mixing

A R ரஹ்மான் இசையில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் அனைத்து மொழி (தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்) ஆடியோ இசை உரிமைகளையும் மும்பையை தலைமையிடமாக கொண்ட  டிப்ஸ் (TIPS) நிறுவனம்  கைப்பற்றியுள்ளது என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ponniyin Selvan Movie A R Rahman Dolby Atmos Music Mixing

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டால்பி அட்மாஸ் இசை மிக்சிங்  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருவதாக ரஹ்மான் அறிவித்துள்ளார். இதற்காக கிரேக் டவுன்லி ரஹ்மானுடன் இணைந்துள்ளார். கிரேக் டவுன்லி Dune படத்தில் பணியாற்றியவர்.

இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

Ponniyin Selvan Movie A R Rahman Dolby Atmos Music Mixing

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

Also Read | இவர் தான் உடையார் ஸ்ரீ ராஜராஜ சோழத்தேவர்! LYCA வெளியிட்ட PS1 பொன்னியின் செல்வன் படத்தின் BTS!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Movie A R Rahman Dolby Atmos Music Mixing

People looking for online information on Dolby Atmos Music Mixing, Maniratnam, Ponniyin Selvan Movie, Ponniyin Selvan Movie updates will find this news story useful.