www.garudabazaar.com

சிறுநீரக கோளாறுடன் போராடிய மாணவர்.. விஜய் ரசிகர்கள் உடனடியாக களத்தில் இறங்கி செய்த உதவி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வேலூர் மாவட்ட விஜய் ரசிகர்கள், ஏழை மாணவரின் ஆபரேஷனுக்கு உதவி செய்துள்ளனர். 

விஜய் ரசிகர்கள் செய்த உதவி | Vellore vijay fans help for student's kidney operation

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மேலும் விஜய் தனது ரசிகர்கள் மூலமாகவும் மக்கள் இயக்கம் மூலமாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். 

விஜய் ரசிகர்கள் செய்த உதவி | Vellore vijay fans help for student's kidney operation

இந்நிலையில் தற்போது விஜய்யின் வேலூர் மாவட்ட ரசிகர்கள், ஏழை மாணவரின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் சலவன்பேட்டையில், சரவணன் என்பவரின் மகன் ரவி, சிறுநீரக கோளாறுடன் போராடி வந்துள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய, சுமார் 12 இலட்சம் வரை செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் ரசிகர்கள் செய்த உதவி | Vellore vijay fans help for student's kidney operation

இந்த விவரம் அறிந்த வேலூர் விஜய் மக்கள் இயக்கத்தினர், முதல்கட்ட உதவியாக ரூபாய் ஒரு லட்சத்தை உதவியாக அளித்துள்ளனர். இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாக, பல்வேறு நடிகர்களின் ரசிகர்களும் உதவி செய்த விஜய் ரசிகர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் ரசிகர்கள் செய்த உதவி | Vellore vijay fans help for student's kidney operation

People looking for online information on Vijay, Vijay Makkal Iyakkam will find this news story useful.