www.garudabazaar.com

''பிக்பாஸ் Entry.. தலயா.. தளபதியா..?! எப்போ கல்யாணம்..? - ஜாலி கேள்விகளுக்கு விஜே ரம்யா பளீச் பதில்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே ரம்யா தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பளீச் பதில்களை கொடுத்துள்ளார். 

விஜே ரம்யா பதில்கள் | VJ Ramya answers to fans questions over vijay ajith biggboss marriage

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரம்யா. கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் இவர் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் பல்வேறு இசை வெளியிட்டு விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் ஓகே கண்மனி, ஆடை, மாஸ்டர் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். 

விஜே ரம்யா பதில்கள் | VJ Ramya answers to fans questions over vijay ajith biggboss marriage

இந்நிலையில் தற்போது ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தல-யா தளபதியா என்ற கேள்விக்கு தல-தளபதி என பதில் கொடுத்துள்ள ரம்யா., விஜய் டிவியில் மீண்டும் எப்போது பார்க்கலாம் என கேட்டதற்கு, ''4 வருடங்கள் ஆகிறது. பார்க்கலாம். என்னை பரவசப்படுத்தும் விதத்தில் ஒரு ஷோ அமைந்தால்'' என தெரிவித்திருக்கிறார்.

விஜே ரம்யா பதில்கள் | VJ Ramya answers to fans questions over vijay ajith biggboss marriage

அப்படியே பிக்பாஸ் போட்டிக்கு அழைப்பு வந்தால் என ரசிகர் ஒருவர் கேள்வியை போட., ''அழைப்பு வந்தால் எடுப்பேன்.,  எடுக்க முடியவில்லை என்றால், நான் கால் செய்து பிசியாக இருப்பதை சொல்வேன்'' என பதிலளித்துள்ள ரம்யா, எப்போ கல்யாணம் என்றதற்கு, ''நானே யோசிக்காத விஷயத்தை பற்றி நீங்க ஏன் இவ்ளோ யோசிக்கிறீங்க'' என ரிப்ளை அடித்துள்ளார். 

விஜே ரம்யா பதில்கள் | VJ Ramya answers to fans questions over vijay ajith biggboss marriage

சினிமாவுக்காக கிளாமர் ஓகே.., ஆனால் கிளாமருக்காக சினிமா என்றால் எப்படி பாஸ் என்றும் வேதனைப்பட்டிருக்கிறார் விஜே ரம்யா. 

தொடர்புடைய இணைப்புகள்

விஜே ரம்யா பதில்கள் | VJ Ramya answers to fans questions over vijay ajith biggboss marriage

People looking for online information on Ajith Kumar, Anchor Ramya, Vijay, VJ Ramya will find this news story useful.