மலையாளம், தமிழ் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, விஜய் சேதுபதி -த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

திரையுலகில் பெண்களுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பாடகி சின்மயிக்கு, திரையுலகிலும், சமூக வலைதளங்களிலும் கண்டன குரல்கள் ஒலித்து வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் பாடகி சின்மயி, தென்னிந்திய டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை என சின்மயி கூறியதற்கு இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான இசையமைப்பாளரின் ட்வீட்டில், ‘முடியாது என்று சொல்லும் வரை சின்மயி என் படத்தில் பாடுவார். அவர் என் படத்தில் பாடுவாரா இல்லையா என்பது குறித்து என்னை தவிர வேறு யாரும் முடிவு செய்ய முடியாது’ என கோவிந்த் வசந்தா தெரிவித்துள்ளார்.
@Chinmayi WILL sing in my films till SHE says NO to me. No one else will decide on behalf of me.
— Govind Vasantha (@govind_vasantha) March 24, 2019