www.garudabazaar.com
iTechUS

வாரிசு படத்தின் 300 கோடி வசூல் சாத்தியமா?.. பத்திரிகையாளர் செய்யாறு பாலு EXCLUSIVE தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த  (11.01.2023) முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Varisu Box Office Reports are true cheyyaru Balu exclusive

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 'துணிவு' படத்தில் பயன்படுத்தப்பட்ட டம்மி பணம்.. வைரலாகும் மேக்கிங் BTS வீடியோ!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Varisu Box Office Reports are true cheyyaru Balu exclusive

Images are subject to © copyright to their respective owners.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாயும், 7 நாளில் 210 கோடி ரூபாய் வசூலித்தது என அறிவிக்கப்பட்டது. மேலும் வாரிசு படம் 11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என்றும் தற்போது வரை வாரிசு படம் 300+ கோடி ரூபாயை வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Varisu Box Office Reports are true cheyyaru Balu exclusive

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை பத்திரிகையாளர் செய்யாறு பாலு அளித்துள்ளார். அதில் "வாரிசு படம்  300 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது நம்பகத்தன்மையானதா?" என்ற கேள்விக்கு"வாரிசு & துணிவு படத்தின் ரிலீஸ்க்கு முன் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ரிலீஸ்க்கு பிறகு வாரிசு படத்தின் வசூல் குறித்து பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகின. தயாரிப்பாளர் தரப்பில் இருந்து 10 நாளில் 250 கோடி என்று அறிவிக்கப்பட்டது. நான் சில டிரேடர்ஸ்க்கிட்ட விசாரித்த போது அது உண்மை தான் என கூறினர்." என செய்யாறு பாலு பதில் அளித்துள்ளார்.

Also Read | பிரபல நிறுவனத்திற்கு தொடர்ந்து 3 படங்கள் நடிக்கும் அஜித்குமார்?!.‌. செய்யாறு பாலு EXCLUSIVE!

வாரிசு படத்தின் 300 கோடி வசூல் சாத்தியமா?.. பத்திரிகையாளர் செய்யாறு பாலு EXCLUSIVE தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Box Office Reports are true cheyyaru Balu exclusive

People looking for online information on Cheyyaru Balu, Cheyyaru Balu exclusive, Varisu, Varisu Box Office Report will find this news story useful.