www.garudabazaar.com
iTechUS

'LEO' படத்தில் பஹத் பாசில் நடிக்கிறாரா?.. நடிகர் மேத்யூ தாமஸ் EXCLUSIVE பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லியோ படத்தில் நடிகர் பஹத் பாசில் நடிப்பது குறித்த கேள்விக்கு நடிகர் மேத்யூ தாமஸ் பதில் அளித்துள்ளார்.

Mathew Thomas answer about Fahadh Faasil in Leo

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன்".. மோகன்லால் உடனான DANCE குறித்து அக்ஷய் குமார் நெகிழ்ச்சி!

நடிகர் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  சில நாட்களுக்கு முன் வெளியானது.

S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Mathew Thomas answer about Fahadh Faasil in Leo

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.

இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

லியோ படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை சன் டிவியும், ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றி உள்ளது.

Mathew Thomas answer about Fahadh Faasil in Leo

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகர் மேத்யூ தாமஸ் அளித்துள்ளார். பேட்டியில் லியோ படம் குறித்த கேள்விகளுக்கு மேத்யூ தாமஸ் பதில் அளித்துள்ளார். குறிப்பாக "லியோ படத்தில் பஹத் பாசில் நடிக்க வாய்ப்புள்ளதா?. பஹத் கூட இதுபற்றிய கேள்விக்கு வாய்ப்பு இருக்கலாம். ஆனால் அது பற்றி தற்போது எறககு தெரியவில்லை என கூறியிருந்தார்" என்ற கேள்விக்கு, "இது குறித்து எனக்கும் தெரியவில்லை. ஒருவேளை பஹத் பாசில் லியோ படத்தில் இருந்தால் அவருடன் பணியாற்ற இன்னொரு வாய்ப்பு அமையும்" என மேத்யூ தாமஸ் பதில் அளித்தார்.

Also Read | அடிபொலி.!.. Bigg Boss ஆயிஷா.. PROPOSAL DAY.. பாய் ஃப்ரண்டுடன் இருக்கும் PHOTO-வை பகிர்ந்து Post.!

'LEO' படத்தில் பஹத் பாசில் நடிக்கிறாரா?.. நடிகர் மேத்யூ தாமஸ் EXCLUSIVE பதில்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mathew Thomas answer about Fahadh Faasil in Leo

People looking for online information on Fahadh Faasil, Leo, Lokesh Kanagaraj, Mathew Thomas, Vijay will find this news story useful.