பிக்பாஸ் நடிகை வனிதா காதலர் பெயரை டாட்டூ குத்தினார்! அதற்கு பீட்டரின் பதில் என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தளபதி விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது குக் வித் கோமாளி மற்றும் யூட்யூப் சேனல் மூலம் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்

Biggboss Vanitha vijayakumar tatoo peter paul name in her hands

லாக்டவுனில் வனிதா புதிதாக ஒரு யூட்யூப் சானலை தொடங்கி பிஸியாக பல வீடியோக்களை பதிவிட்டு வந்தார். சமீபத்தில் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

வனிதா, பீட்டரின் திருமணம் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த்ச் செய்தியை மீடியாவில் மட்டுமல்லாமல் தன் இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டார் வனிதா. வனிதாவின் திருமண முடிவு அவரது ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது பீட்டரை சந்தித்த நிகழ்வு மற்றும் திருமணம் செய்ய முடிவெடுத்தது பற்றி தனது யூட்யூப் சேனலில் நேரலையில் வந்து தெரிவித்தார் வனிதா காதலர் பீட்டர் பாலின் புகைப்படத்தை வெளியிட்டு, தனது திருமண திட்டம் குறித்து பேசினார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா தன் கையில் பீட்டர் பால்  பெயரை டாட்டூ குத்தி அதைப் பதிவிட்டுள்ளார். அவரது கைக்கு இணைவாக பீட்டர் பால் வனிதாவின் பெயரை டாட்டூ குத்தியுள்ளார். இரண்டு கைகளையும் அருகருகே வைத்து படமெடுத்து அதற்கு கேப்ஷனாக ‘அன்பின் சின்னமாக பதிக்கப்பட்டது’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் வனிதா.

இந்த புகைப்படத்துக்கு வனிதாவின் ரசிகர்கள் பலரும் பதில் அளித்து வருகின்றனர். அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் வனிதா

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Etched for love

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss Vanitha vijayakumar tatoo peter paul name in her hands

People looking for online information on Bigg boss, Lockdown, Vanitha, Vanitha marriage will find this news story useful.