''என்னோட ரிலேஷன்ஷிப் பத்தி பேச உனக்கு உரிமையில்ல'' - வனிதாவிடம் கோபமான ஷெரின்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 05, 2019 10:14 AM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று (செப்டம்பர் 5) ஆம் தேதி விஜய் டிவி வெளியிட்டுள்ள முதல் புரோமோவில், வனிதா, ஷெரின் மற்றும் சாக்ஷியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்.

அப்போது வனிதா, என் கண்ணு முன்னாடி இந்த வீட்ல ஒரு Affair நடந்துட்டு இருக்கு. அத எப்படி நான் பொறுத்துக்க முடியும் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு ஷெரின், அத எப்படி நீ Affairனு சொல்லலாம். என்னோட Relationship பத்தி பேச உனக்கு உரிமையில்ல என்கிறார்.
பின்னர் தர்ஷனிடம் சென்று நான் உனக்கு என்னடா பண்ணேன் என்று கேட்கிறார். நேற்றைய தினமே என்னை பற்றியும் தர்ஷன் பற்றியும் பேசுவது எனக்கு சுத்தமா பிடிக்கலனு சாக்ஷியிடம் ஷெரின் தெரிவித்தார்.
#Day74 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/kmt4GO3yig
— Vijay Television (@vijaytelevision) September 5, 2019