''நல்லவேள கவின் ஒலிம்பிக் போகல...'' - பிரபல நடிகர் கலாய்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 05, 2019 09:40 AM
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விருந்தினர்களாக சாக்ஷி, ஷெரின், மோகன் வைத்தியாவும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். ஏற்கனவே கவினுடன் பிரச்சனையில் இருக்கும் வனிதாவும், ஷெரினும் சாக்ஷியுடன் கூட்டு சேர்ந்து கொண்டனர்.

இந்நிலையில் கவின், மற்ற நாட்டில் இருந்து வந்த நீங்கள் ஜெயிக்கவேண்டும் என்பது போல லாஸ்லியா, தர்ஷன், முகேனுடன் தெரிவித்தார். இதுகுறித்து பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில், நல்ல வேளை கவின் ஒலிம்பிக் போன்ற போட்டிகளுக்கு போகலை. மத்த நாட்டுக்காரங்க ஜெயிச்சா அவங்களுக்கு பெருமைன்னு உளரிகிட்டே Loss ஓட ஓரமா உக்காந்து கடலை விவசாயம் பார்த்திருப்பார். HORRIBLE. என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு ட்விட்டில், ஒட்டு மொத்த விளையாட்டார்களில் இது விளயாட்டு, வாழ்க்கையுடன் இதை குழப்பிக்கொண்டு அசிங்கப்படாமல் மிகத்தெளிவாக இருப்பவர் ஷெரின் மட்டுமே. என்று தெரிவித்துள்ளார்.
#BiggBossTamil3 நல்ல வேளை கவின் ஒலிம்பிக் போன்ற போட்டிகளுக்கு போகலை. மத்த நாட்டுகாரங்க ஜெயிச்சா அவங்களுக்கு பெருமைன்னு உளரிகிட்டே Loss ஓட ஓரமா உக்காந்து கடலை விவசாயம் பார்த்திருப்பார். HORRIBLE.
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) September 4, 2019