''கவின் பன்றதும் ஒருவகையில Cheating...'' - பிரபல நடிகை குற்றச்சாட்டு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 04, 2019 11:25 AM
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்தியா உள்ளிட்டோர் விருந்தினர்களாக உள்ளே நுழைந்தனர். ஏற்கனவே கவினுடன் பிரச்சனையில் இருக்கும் வனிதாவும் ஷெரினும் சாக்ஷியுடன் கூட்டு சேர்ந்துள்ளனர்.

இதனால் ஏற்படும் விளைவுகள் இனி தான் தெரியவரும். நாமினேஷனில் கவின் ஷெரினையும், சேரனையும் அவர்கள் ஏற்கனவே பிரபலமானவர்கள் என்று நாமினேட் செய்தார். அதற்கு வனிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு கவின் எனக்கு நண்பர்கள் தான் முக்கியம். முகேன், தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் வாழ்வில் நிறைய கஷ்டப்பட்டு இருக்காங்க என்று பேசியிருந்தார்.
இதற்கு பிரபல நடிகை ஸ்ரீபிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், கவின் நட்புக்கு மரியாதை கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் நண்பர்களுக்காக அவர் விளையாட்டை விட்டுக்கொடுப்பேன் என்பது ஒரு வகையான ஏமாற்றுவேலை போல தெரிகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'வாக்குப்பெறாமல் வெளியேற்றப்பட்டவர் நான் மக்களால் விரும்பப்பட்டு தான் உள்ளே வந்திருக்கேன் என்று BB அவர்களிடமே சொல்லும்போது அதை ஒப்புக்கொள்வதைப்போல் பதில் ஏதும் கூறாதது ஏன்?அப்போ அவரை வெளியேற்றியது மக்களின் விருப்பதுக்கு மாறாகவா?வாக்கு சரியாக மக்களுக்கு சொல்லப்படவில்லையா?' என்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
Kavin...respecting friendship is to be appreciated but giving up a game for a friend when there are other people as well...seems to be like kind of cheating
— sripriya (@sripriya) September 3, 2019