“வயசு 28.. நரைமுடி வந்துடுச்சு.. கல்யாணம் பண்ணனும்”.. புலம்பிய ராம்.. வறுத்தெடுத்த ஆயிஷா
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டா ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் மக்களை கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன் பின்னர் மகேஸ்வரி எலிமினேட் ஆனார். இதனிடையே வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா பங்கேற்றுள்ளார்.
கடந்த வாரத்தில் நிவாஷினி எலிமினேட் ஆகியிருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் 44வது நாளில் ராம் ராமசாமி பேசியுள்ள விஷயங்கள் வைரலாகி வருகின்றன. இதில் எபிசோடு தொடங்கியவுடனேயே ராம் ராமசாமி, “அண்ணனுக்கு வயசாயிடுச்சு மா... பொண்ணு இருந்தா பாரு.. 28 வயசு ஆகுது.. முடி நரைக்க ஆரம்பிச்சிடுச்சு. கல்யாணம் பண்ணி செட்டில் ஆகணும்’ என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
இதை கேட்ட ஆயிஷா ராம் குறித்து ராமை முன்னாடி வைத்துக்கொண்டு கதிரவன் & விக்ரமனிடம் பேசுகிறார். அதில், “ராமிடம் நான் இதுபற்றி கேட்டேன்.. 28 வயசுலயே கல்யாணமாங்க அண்ணா? 2 வருஷம் போகட்டும் பொறு.. உங்களலாம் புடிச்சுட்டு வந்து யங்ஸ்டர் கண்டண்ட் கொடுப்பாங்கனு சொல்லி பிக்பாஸ்ல எடுத்து வெச்சா.. வொர்த்தே இல்லனு சொன்னேன்.. ஆனால் அவரோ நான் பேச வேண்டிய இடத்துல பேசுவேன்.. என்ன மத்தி தெரியாமலயே உள்ள அனுப்பிருக்காங்கனு கேக்குறார். ஆனால் நான் கேட்டேன் இங்க எங்கடா நீ பேசுற? என கேட்டேன்” என சிரித்துக்கொண்டே ராமை ஜாலியாக வறுத்தெடுத்தார்.