www.garudabazaar.com

“சரிடீ.. பட்டு.. தங்கம்.. மூக்குத்தி”.. சிறையில் அழுத ரச்சிதாவை கொஞ்சி தேற்றிய ராபர்ட்.. bigg boss

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நவம்பர் 20, பிக்பாஸ்: ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது 6வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். 

robert words to rachitha while she crying in jail bigg boss 6

போட்டியாளர்கள் :

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

robert words to rachitha while she crying in jail bigg boss 6

எலிமினேஷன் :

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

robert words to rachitha while she crying in jail bigg boss 6

அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன் பின்னர் மகேஸ்வரி எலிமினேட் ஆனார். இதனிடையே வைல்டு கார்டு எண்ட்ரியாக  மைனா பங்கேற்றுள்ளார்.

இந்த வார டாஸ்க் :

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் விதவிதமான டாஸ்க்குகள் வழங்கப்படும். அவ்வகையில் கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறியது,. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை எற்றனர்.

robert words to rachitha while she crying in jail bigg boss 6 அவ்வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரச்சிதா, படைத்தளபதியாக அசீம், அரசவை ஆலோசகராக (ராஜகுருவாக) விக்ரமன், இளவரசராக மணிகண்டா ராஜேஷ், இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டனர்.

உடைந்த சீக்ரெட் டாஸ்க்:

இந்த டாஸ்கில் முதல் நாள் உணவில் உப்பு இருந்ததாக ராணியார் ரச்சிதா கூற, படைத்தளபதி அசீமுக்கும் ராஜகுரு விக்ரமனுக்கும் வாக்குவாதம் வலுத்தது. இதனை அடுத்து, மன்னருக்கு தெரியாமல் ராஜ்ஜியத்தின் செல்வப்பொக்கிஷங்களை திருடக்கூடிய சீக்ரெட் டாஸ்க்கை அசீம் மற்றும் கதிரவன் உதவியுடன் ராணியார் ரச்சிதா செய்ய வேண்டும் என பிக்பாஸ் பணித்தார்.

robert words to rachitha while she crying in jail bigg boss 6

இந்த டாஸ்க்கின் இறுதி நாளான நேற்று சீக்ரெட்டுகளை பிக்பாஸே வீடியோ போட்டு உடைத்தார். பின்னர் கன்ஃபெஷன் ரூமுக்கு விக்ரமனை அழைத்த பிக்பாஸ் ராஜ்ஜியத்தில் திருட்டுகள் நடப்பதால், தலைமையை மாற்ற சொல்லி கட்டளையிட்டார்.

கண்ணீர்விட்ட ராபர்ட் & ரச்சிதா :

இதனால் மன்னர் பொறுப்பு ராபர்ட்டிடம் இருந்து பறிக்கப்பட்டது. இதனை ஏற்க முடியாத ராபர்ட், தான் மிகவும் நம்பி பழகிய ரச்சிதா என்னை ஏமாற்றிவிட்டார், நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார், முதுகில் குத்திவிட்டார் என தனியே அமர்ந்து கண்ணீர்விட்டு புலம்ப, அது வெறும் டாஸ்க்தான் சாமி என ஹவுஸ்மேட்ஸ் சமாதானம் சொல்ல ராபர்ட் மாஸ்டரோ சமாதானம் ஆகவில்லை.

robert words to rachitha while she crying in jail bigg boss 6

ஆனால் ராபர்ட் தன்னை அவ்வாறு பேசியதை தாங்கிக்கொள்ள முடியாத ரச்சிதா ஒரு பக்கம் அழத் தொடங்கினார். அவரையும் மைனா நந்தினி தேற்றினார். ஆனால் டாஸ்க்கிற்காகவே செய்தாலும் தான் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக மாஸ்டர் தன்னை கூறியதையும்,  முதுகில் குத்தி விட்டதாக விமர்சிப்பதையும் தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என கூறி கதறி அழுதார்.

ரச்சிதாவை தேற்றிய ராபர்ட்..

இந்நிலையில் ஒருவழியாக நடந்து முடிந்த இந்த டாஸ்கில், 3 பெஸ்ட் பெர்ஃபார்களாக மைனா, மணிகண்டன், தனலட்சுமி ஆகியோர் சக ஹவுஸ்மேட்ஸ்களின் நாமினேஷன்களின் இறுதிப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் மூவருமே அடுத்த வார தலைவர் போட்டியில் போட்டியிடத் தகுதி உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டனர். இதேபோல் மோசமான பெர்ஃபார்மர்களாக ராபர்ட் & ரச்சிதா தேர்வாகி சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

robert words to rachitha while she crying in jail bigg boss 6

சிறைக்கு சென்றும் ராபர்ட் அழுததையும், தன்னை பற்றி அப்படி கூறியதையும் குறிப்பிட்டு ரச்சிதா அழுதுகொண்டிருந்தார். அவரை பார்த்த ராபர்ட், “சரி விடு.. நான் தான் அழுதுட்டேன்.. நீ ஏன் அழுற? நான் அவ்வாறு பேசியிருக்க கூடாது. இது டாஸ்க்தான் என்பது எனக்கும் புரிகிறது, இருந்தாலும் எனக்கு உன்னை பிடிக்கும், நீ என்னிடம் சொல்லாமல் பண்ணியதை என்னால் ஏற்க முடியவில்லை. நீ வேற, நான் வேற இல்லயா? எல்லாராலயும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்ள முடியாது இல்லையா ?” என தேற்றினார்.

robert words to rachitha while she crying in jail bigg boss 6

ஆனாலும் மேலும் தேம்பி அழுதுகொண்டிருந்த ரச்சிதாவிடம், “சரிடீ.. பட்டு இல்ல.. தங்கம்.. மூக்குதி.. என்னுடன் இருப்பவர்கள் யாரும் அழக்கூடாது. நீயும் நானும் ஒரே சிறையில் இருப்பது குறித்து கமல் சார் கேட்பார்.. ” என சிரிப்பு காட்டினார். அதன் பின்னர் ரச்சிதாவும் எழுந்து உட்கார்ந்து இயல்பானார்.

robert words to rachitha while she crying in jail bigg boss 6

People looking for online information on Bigg boss 6 tamil promobigg boss 6 tamil contestants listbigg boss tamil, Bigg boss tamil 6bigg boss season 6vijay tvbigg boss tamil promo, Bigg boss tamil 6bigg boss tamil season 6bigg boss tamil 6 contestantsrachitha mahalakshmi, Robert rachitha will find this news story useful.