"2 வாரமா கேக்குறேன்ல".. ஃபோன் நம்பர் கேட்டு அடம்பிடித்த ராபர்ட் .. ரச்சிதா சொன்ன பதில்.. bigg boss 6 Tamil
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டா ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் மக்களை கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன் பின்னர் மகேஸ்வரி எலிமினேட் ஆனார். இதனிடையே வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா பங்கேற்றுள்ளார். கடந்த வாரத்தில் நிவாஷினி எலிமினேட் ஆகியிருந்தார்.
பிக்பாஸ் ஆரம்பமானது முதலே ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா ஆகியோரிடையே நடைபெறும் உரையாடல்கள் உள்ளிட்ட விஷயங்கள் அதிக அளவில் கவனம் பெறும். இதனிடையே, சமீபத்தில் ராபர்ட் மாஸ்டர் கிச்சன் ஏரியாவிலேயே சுற்றி வருவதை குறிப்பிட்டு தனலட்சுமி சில கருத்துக்களை பேசி இருந்தார்.
இதனை ரச்சிதாவும் வழிமொழிய ராபர்ட் மாஸ்டர் அப்செட் ஆனதாக தெரிகிறது. இது பற்றி நேரடியாகவே ராபர்ட் மாஸ்டரிடம் பேச முடிவு செய்த ரச்சிதா, "ஏன் இப்படி அப்நார்மலாக நடந்து கொள்கிறீர்கள்?. நார்மலாக இருங்களேன். நீங்க என்ன எவ்வளவு கலாய்க்குறீங்க, பதிலுக்கு நான் ஒன்னும் சொல்ல கூடாதா?. ஏன் இப்படி இருக்கீங்க. நீங்க பண்றது குழந்தைத்தனமா இருக்கு. உங்களுக்கு அது தெரியுதா?. எதோ எதிரி மாதிரி Behave பண்றீங்க. எதிர்ல் இருக்கிறவங்களுக்கு எப்படி இருக்கும்ன்னு தெரியுமா?. நீங்க நார்மலா இருங்க" என சொல்லிவிட்டார்.
அதன் பிறகு கடந்த ராஜா ராணி டாஸ்கில் ராணி வேஷத்தை ரச்சிதா போட, ராஜா வேஷம் போட்ட ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா கடைசியில் சீக்ரெட் டாஸ்கில் பலருடன் சேர்ந்துகொண்டு தன்னிடம் உண்மையை சொல்லாமல், தன்னை ஏமாற்றி முதுகில் குத்துவிட்டதாக கூறி அழுதார். ராபர்ட் இப்படி சொன்னதால் ரச்சிதாவும் மனமுடைந்து அழுதார். பின்னர், தான் அவ்வாறு சொன்னதற்கு ஜெயிலில் வைத்து ராபர்ட் மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில்தான், ரச்சிதாவின் கான்டாக்ட் நம்பரை ராபர்ட் கேட்டுள்ளார். ஆம், 44வது நாளில் கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்த ரச்சிதா பக்கம் போன ராபர்ட், ‘2 வாரமா நான் உங்கிட்ட போன் நம்பர் கேக்குறேன்.. நியாபகம் இருக்கா? அசல் போனதுல இருந்து நான் நம்பர் கேக்குறேன்..’ என்று கேட்க, ‘இது ஒரு விஷயம் என இப்படி கேட்டுட்டு இருக்கீங்களே.. நம்பர் சொன்னா நியாபகம் வெச்சுப்பீங்களா? பேப்பர் பேனா இருக்கா?’ என கேட்க, அவரோ, “அதற்கான சூழல் வந்தது நீதான் நம்பர் தரவில்லை” என சொல்லிவிட்டார். ஆனால் ரச்சிதாவோ, “அச்சோ மறுபடியும் மொதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணாதீங்க” என சொல்லிவிட்டு மீண்டும் சமைக்க தொடங்கினார்.
முன்னதாக ‘இதுவரை இல்லாத உணர்விது’ பாடலை ரச்சிதாவை நோக்கி பாடிய ராபர்ட், “பெண்ணை நம்பாதே” என்கிற வரிகளில் முடித்தார். அதாவது ரச்சிதா தன்னுடன் மட்டும் நெருக்கமாக பழகவில்லை, ஆனால் அனைவருடனும் நன்றாக பழகுகிறார் என்பதை ராபர்ட் அந்த பாடல் மூலமாக வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.