Breaking: அசோக் செல்வன் - ரித்திகா சிங் இணைந்துள்ள 'ஓ மை கடவுளே' படத்தின் முக்கிய அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 16, 2019 05:40 PM
நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடித்துள்ள படம் ‘Oh My கடவுளே’. இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, வாணி போஜன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தை ஆக்ஸெஸ் ஃபிலிம் ஹவுஸ் வெளியிடுகிறது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு விது அய்யன்னா(Vidhu Ayyenna) ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் வெளிநாடுகளுக்கான உரிமையை ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிவைடைந்து ரிலீஸிற்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : Ashok Selvan, Ritika singh, Vani Bhojan, Oh My Kadavule