இமான், சந்தோஷ் நாராயணன், லியோன் ஜேம்ஸ் கூட்டனியில் வெளியான இளைஞர்களின் Anthem இதோ !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஓ மை கடவுளே. இப்படத்தின் பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

santhosh narayanan sings for leon james oh my kadavule's single

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கித்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஓ மை கடவுளே. ரித்திகா சிங், வானி போஜன், ஷாரா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கும் இத்திரைப்படம், வரும் பிப்ரவரி 14 அன்று வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ஓ மை கடவுளே படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகியுள்ளது. என்னடா லைஃப் இது எனும் இப்பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.  இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை ரசிக்கும்படி எழுதப்பட்டிருக்கும் இப்பாடல், இளைஞர்களின் Anthem-ஆக அமைந்திருக்கிறது.

லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கும் இப்பாடலை இசையமைப்பாளர் இமான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இமான், சந்தோஷ் நாராயணன், லியோன் ஜேம்ஸ் கூட்டனியில் வெளியான இளைஞர்களின் ANTHEM இதோ ! வீடியோ

Entertainment sub editor