www.garudabazaar.com

"வலிமை" ரிலீஸ் தேதி இது தான்! புதிய போஸ்டருடன் போனிகபூர் வெளியிட்ட OFFICIAL அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : நடிகர் அஜித் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' படத்தின் ரிலீஸ் தேதி OFFICIAL ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

Valimai Release Date February 24 2022 Officially Announced

இயக்குனர் மணிரத்னத்திற்கு புனே MIT பல்கலைக்கழகம் கொடுத்த மிகப்பெரிய கௌரவம்! முழு விபரம்

வலிமை படம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனை முன்னிட்டு 'வலிமை' படம் சென்சாரகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது.

பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியானது.

Valimai Release Date February 24 2022 Officially Announced

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் போன்ற மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதியில் இருந்து 50% பார்வையாளர்களாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  ஜனவரி மாதம் 1 முதல் தமிழக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு (பார்வையாளர்கள்) மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

உலகெங்கும் மூன்றாவது அலை ஒமிக்ரான் பரவலும் அதிகரித்தது, இந்த காரணிகள் படத்தின் வசூலை பாதிக்கலாம். இதன் காரணமாக ரிலீஸ் தேதி (13.01.2022) இருந்து ஒத்தி வைக்கப்பட்டது.

இது குறித்து போனி கபூர் டிவிட்ட்ரில் " பார்வையாளர்களும் ரசிகர்களும் எப்பொழுதும் எங்களின் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்துள்ளனர். கடினமான காலங்களில் அவர்களின் நிபந்தனையற்ற ஆதரவும் அன்பும், இன்னல்களை எதிர்கொள்வதற்கும், எங்களின் கனவுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் முக்கியமான நம்பிக்கைகளை நமக்குள் விதைத்தது. சினிமா அரங்குகளில் அவர்களை மகிழ்ச்சியாகவும் பார்க்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தருணத்திலும் நாங்கள் விரும்பியது.

Valimai Release Date February 24 2022 Officially Announced

அதே நேரத்தில், எங்கள் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் எங்கள் எல்லா முடிவுகளிலும் முன்னணியில் உள்ளது. உலகம் முழுவதும் கோவிட் தொற்றுகள் அதிகரித்து வருவதாலும், அரசின் விதிமுறைகளுக்கு இணங்குவதாலும், எங்கள் திரைப்படமான 'வலிமை' படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். தடுப்பூசி போட்டு, முகமூடி அணிந்து பாதுகாப்பாக இருங்கள். மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்!" என கூறி இருந்தார்.

இந்நிலையில் கொரோனா பரவல் குறைவதாலும், இரவு , ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதாலும் பெரிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி உள்ளன, அதன் படி வலிமை படத்தை முதலில் திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  

Valimai Release Date February 24 2022 Officially Announced

சூர்யாவின் ET படத்துடன் மோதும் பிரபாஸ்! வெளியான ராதே ஷியாம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி

 

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Release Date February 24 2022 Officially Announced

People looking for online information on Ajith Kumar, AK, வலிமை, Boney kapoor, H Vinoth, Pan India Valimai, Valimai, Valimai FDFS, Valimai Release, Valimai release date, Valimai Tamil, Valimai TICKET, Valimai trailer will find this news story useful.