www.garudabazaar.com

வாயில் இருந்ததை துப்பிவிட்டு செல்ஃபி எடுத்த ரசிகர்.. விழுந்து விழுந்து சிரித்த நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்: நடிகை ஊர்ப்பி ஜாவேத்திடம் ரசிகர் ஒருவர் பான்பராக் வாயோடு செல்ஃபி எடுத்த போது ஊர்ப்பி விழுந்து விழுந்து சிரிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

fans on road trying to take selfie with urfi javed

நடிகர் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு பிரமிப்பு தான். எப்படியாவது நமக்கு பிடித்த நடிகரிடம் ஒரு புகைப்படம் எடுத்து விட வேண்டும். அதுவே ரசிகர்களின் வாழ்நாள் ஆசையாகவே இருக்கும்.  பிரபலங்கள் வரும் இடத்திற்கு முன்னமே வந்து, பவுன்சர்களை மீறி, பிரபலத்திடம் கெஞ்சி கூத்தாடி எப்படியாவது அந்த செல்ஃபியை எடுத்து விடுவார்கள். ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள், நடிகைகளின் படத்தை திரையில் வருவதை பார்த்து கொண்டாடுவதும், சிலாகித்து பேசுவதும் உண்டு.

fans on road trying to take selfie with urfi javed

இதில் பிரபலத்தின் மீது கொண்ட அதீத அன்பால் சில சமயங்களில் ரசிகர்கள் எல்லை மீறி நடப்பதும் வீடியோக்களாக வைரலாகும். அந்த வகையில் ரசிகர் ஒருவர் ரோட்டில் நின்ற நடிகையிடம் செல்ஃபி எடுக்க முயன்று மொக்கை வாங்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஊர்ப்பி ஜாவேத். இவர், Bade Bhaiyya Ki Dulhania, Chandra Nandini, Meri Durga, Bepanaah உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.

ஓடிடி தளமான ALT Balaji ஸ்டீரிமிங்கில்  Puncch Beat Season 2 வில் மீராவாக நடித்து பிரபலமடைந்தார். மேலும், பிக்பாஸ் OTT சீசன் 1ல் போட்டியாளராகவும் பங்கேற்றார். இந்நிலையில்,  ஊர்ப்பி ஜாதேவ் பிக்பாஸ் சீசன் 15 வெற்றியாளர் தேஜஸ்வி பிரகாஷ் குறித்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, செய்தியாளர்கள் அவரை படம் பிடித்தனர். மாடர்ன் உடயில் படம் பிடித்துக் கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் பான்பராக் வாயோடு ஊர்ப்பி ஜாவேத்திடம் செல்ஃபி எடுக்க ஓடோடி வந்தார்.

fans on road trying to take selfie with urfi javed

இதனைப்பார்த்த பத்திரிகையாளர்கள், என்ன பாய் என்று கேட்க, வாயில் இருந்த பான்பராக்கை புளிச் என்று துப்பிவிட்டு நடிகையுடன் செல்ஃபி எடுத்தார். அப்போது பான்பராக் அவரது வாயில் ஒழுகியது. அவரது செயலை பார்த்து சிரிப்பை அடக்க முடியாத ஊர்ப்பி ஜாவேத் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.  ஆனால் அவரால் கடைசி வரை சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

fans on road trying to take selfie with urfi javed

People looking for online information on Bigg boss, Bollywood, Fans, Instagram, Selfie, Urfi Javed, Viral video will find this news story useful.