இயக்குநர் Aishwarya R Dhanush-க்கு Covid Positive.. மருத்துவமனையில் அனுமதி.. வெளியான Photo!
முகப்பு > சினிமா செய்திகள்சென்னை 01,பிப்ரவரி 2022:- இயக்குநர் ஐஸ்வர்யா ஆர். தனுஷ் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐஸ்வர்யா & தனுஷ்
அண்மையில், நடிகர் தனுஷூம், இயக்குநரும் , ரஜினிகாந்த்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யாயும் கடந்த ஜனவரி 17ம் தேதியன்று தாங்கள் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த தம்பதியருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் இருவரும் பிரிவதாக தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்திருந்தனர்.
இயக்குநர் ஐஸ்வர்யா ஆர். தனுஷ்
இதனிடையே இயக்குநர் ஐஸ்வர்யா ஆர் தனுஷ் தமது அடுத்த கட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தது தொடர்பான புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி வைரலாகியிருந்தன.
ஆம், வேலண்டைன்ஸ் டே-வை முன்னிட்டு ஐஸ்வர்யா இயக்கும் இந்த ஆல்பம் பாடல் பணி நிமிதமாக, அந்த ஆல்பத்தை உருவாக்கும் தமது படக்குழுவினருடன் ஐதராபாத்தில் ஐஸ்வர்யா உரையாடலில் ஈடுபடும் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வந்தன. இந்த புகைப்படங்களுடன் கூடிய தகவல்களை, அந்த ஆல்பத்தின் தயாரிப்பு நிறுவனம் தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது.
காதலர் தின ஆல்பம்
அதன்படி, காதலர் தினத்திற்காக இயக்குநர் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில், ரொமான்டிக் பாடல் ஒன்று தயாராகி வருவதாகவும், ஜனவரி 25-ஆம் தேதி துவங்கி 27-ஆம் தேதி வரை அதற்கான ஷூட்டிங் நடப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியதுடன், அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தன.
இயக்குநர் ஐஸ்வர்யா ஆர். தனுஷ் தமது முதல் படமாக 3 திரைப்படத்தை இயக்கி இருந்தார். தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவான இந்த திரைப்படமும் சரி, இந்த படத்தில் அமைந்த ஒய் திஸ் கொலவெறி பாடலும் சரி பெருவாரியாக கவனிக்கப்பட்டன. குறிப்பாக தனுஷ் குரலில் வெளியான ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆகி, யூட்யூப்பில் மிகப் பெரிய சாதனை படைத்தது.
இதேபோல் கடந்த 2012-ஆம் ஆண்டு 3 திரைப்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் ஐஸ்வர்யா, கடந்த 2015-ஆம் ஆண்டு வை ராஜா வை எனும் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த், விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இவ்வளவு எச்சரிக்கையாக இருந்தும்..
இந்த நிலையில் தான் தனக்கு கொரோனா இருப்பதாக தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள இயக்குநர் ஐஸ்வர்யா ஆர். தனுஷ், “இவ்வளவு எச்சரிக்கையாக இருந்தும் கொரோனா பாசிடிவ் என வந்துவிட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.
அனைவரும் 2022-ல் மாஸ்க், தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார். ஐஸ்வர்யா ஆர். தனுஷின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் தற்போது அவருக்கு கெட் வெல் சூன் என்று நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Aishwaryaa Rajinikanth First Pictures After Separation Goes Viral
- Dhanush Aishwarya Rajinikanth Divorce Fans Reaction In Twitter
- Dhanush Aishwarya Dhanush Divorced Shocking For Dhanush Fans
- History Aishwarya Dhanush Shares Rajini And Dhanush Award Pic
- "This Is History...": Aishwarya Dhanush 'capture Of The Day' Picture Goes VIRAL
- After Ponniyin Selvan, Lyca Productions Announces Their NEXT With Superstar Rajinikanth's Daughter Aishwarya Dhanush
- Viral Video Of Dhanush Singing Rajinikanth's Song Ilamai Thirumbudhe For Aishwarya Dhanush
- Dhanush Latest Pic Shared By Wife Aishwarya Dhanush With Karnan Dialogue Goes Viral
- Wife Aishwarya Rajinikanth Shares A Sneak-peek Into Dhanush's Midnight Birthday Bash, Latest Pic Go Viral
- Stunning New Workout Pics Of Aishwarya R Dhanush Is Rocking The Internet
- Director Maniratnam Reveals Why He Did Not Act In Aishwarya Dhanush's Film | இயக்குநர் மணிரத்னம், ஐஸ்வர்யா ராஜேஷ் பட வாய்ப்பை நிராகரித்தது க
- Mani Ratnam Reveals Why He Rejected Rajinikanth’s Daughter Aishwarya Dhanush’s Acting Offer
தொடர்புடைய இணைப்புகள்
- Sneha Daughter Aadyanthaa Birthday Party 🥳 Style-ஆ வந்த Meena, Birthday Celebration Video
- "இதுவரைக்கும் 7,8 Breakup" | "தேவையில்லாத கேள்வி கேட்காதீங்க" Breakup #Shorts
- 'ராஜ நடையில் ரஜினி?' சும்மா Styleஆ! கெத்தா ! Fansக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த Low Budget Thalaivar
- ധനുഷ്- സമന്ത, രവീണ ടൺ ടൺ- രാഹുൽ ദ്രാവിഡ് തുടങ്ങി, ഗോസിപ്പുകൾ ഒരുമിപ്പിച്ച താര ജോഡികൾ.
- Social Media -ல அதை பற்றி பேசலாமா..? Public Comments #Shorts
- Breakup பற்றி என்ன நினைக்கிறீங்க? "அத பத்தி கேட்காதீங்க" | #Shorts
- கல்யாணமா..? Living Together-ஆ..? எது சிறந்தது? - Lakshmy Ramakrishnan பேட்டி
- Bedroom -ஆ எட்டி பார்க்காதீங்க! Break-Up பற்றி மனம் திறக்கும் இளைஞர்கள்
- "ஒரு ரசிகனா சொல்றேன்".. தனுஷ் -ஐஸ்வர்யா பிரிவு குறித்து உருக்கமாக பேசிய SAC..! |SAC Emotional Speech
- Celebrity Divorce பற்றி Twitter-ல் கொளுத்தி போட்ட Director..! தனுஷ் Fans பதிலடி
- 'Aishwarya-காக தனுஷ் பாடிய கடைசி பாடல்'.. வீடியோவை பகிர்ந்து வருத்தம் தெரிவித்த ரசிகர்கள்..!
- "Dhanush & Aishwarya பிரிவதாக அறிவிப்பு"...முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை...