www.garudabazaar.com

"முகேனுடன் நடிச்சது, சிவகார்த்திகேயனுடன் நடிச்சது போல இருந்தது" - சூரியின் கலகல பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் நாயகனாக நடிக்கும் “வேலன்” திரைப்படம். அழகான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் கவின் எழுதி, இயக்கியுள்ளார். டிசம்பர் 31 வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Valimai Distributors Kalaimagan Mubarak Velan Audio Launch

இவ்விழாவினில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் பேசியதாவது…இது என் முதல் மேடை. Skyman Films International சார்பில்  அனைவருக்கும் நன்றி. ஒரு நல்ல படம் செய்துள்ளோம் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் சூரி பேசியதாவது…அண்ணாத்த படத்தில் நடிக்கும் போது ஷாட் ரெடி என சொன்னால், நாம் எந்திருக்கும் முன் 35 அடி போயிருப்பார் ரஜினி சார், அவருக்கு அந்த எனர்ஜியை கடவுள் தந்திருக்கிறார்.  சினிமாவில் இன்று ஜெயிப்பது அத்தனை ஈஸி இல்லை, முபாரக் சார் அடுத்து ஜீவி படம் செய்கிறார், வலிமை படம் விநியோகம் செய்கிறார் அவர் தொடும் இடம் எல்லாம் வெற்றி பெறுகிறது. அவருக்கு வாழ்த்துக்கள், அன்பு தம்பி கவின் சிறுத்தை சிவா அவர்களிடம் உதவியாளர் மிக சிறந்த உழைப்பாளி, அவரிடம் இருந்து வந்து, முதல் படம் செய்வது கவின் தான். உங்கள் குருநாதர் போல் நீங்கள் பெரிய வெற்றி பெற வேண்டும், முகேன் 500 பேர் இருந்தால் 495 பேர் விசில் அவருக்கு தான் கிடைக்கிறது, முகேனுடன் நடித்தது, சிவகார்த்திகேயனுடன் நடித்தது போல் இருந்தது. அவருக்கு மிகப்பெரும் எதிர்காலம் இருக்கிறது. இறைவன் ஆசிர்வாதம் அவருக்கு இருக்கிறது. மீனாக்‌ஷியுடன் கென்னடி கிளப் படத்தில் நடித்திருக்கிறேன் மிக அருமையாக நடித்துள்ளார். பிரிகிடாவுக்கு ஷீட்டிங் ஸ்பாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது, ராகுல் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விட்டான். கார் கம்பெனிக்குள் போய் ஒரு ப்ராங் பண்ணியிருந்தார் அட்டகாசமாக இருந்தது. மனுஷன் அடி வாங்காமல் தப்பி வந்து விடுகிறார். பிரபு சார் சீனியர் ஆக்டர், ஆனால் புதுசா வரும் நடிகரிடம் இயல்பாக பழகுவது எல்லாம் அத்தனை சாதாரணமானதல்ல, ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் நன்றாக பார்த்து கொள்வார், அவருக்கு பெரிய நன்றி. இந்தப்படம் வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி.

Valimai Distributors Kalaimagan Mubarak Velan Audio Launch

நடிகர் முகேன் ராவ் பேசியதாவது…இவ்வளவு பெரிய மேடையை என் வாழக்கையில் முதல் முறையாக பார்க்கிறேன். கவின் அண்ணா, கலைமகன் முபாரக் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி, ஒரு கலைஞன் தனக்கு வாய்ப்பு கிடைக்காத என ஏங்கி கொண்டிருப்பான் அப்படி ஏங்கும் போது வாய்ப்பு தந்தவர்கள் இவர்கள், கவின் அண்ணா என்னிடம் கதை சொன்னபோதே மிகவும் ரசித்தேன். அவர் சொன்ன மாதிரியே சூப்பராக எடுத்திருக்கிறார். முபாரக் சார் என்னை மட்டுமல்ல இன்னும் நிறைய திறமையாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார், அவருக்கு நன்றி. பிரபு சார் மிகப்பெரிய லெஜண்ட் ஆனால் என்னை ஒரு மகனை போல், ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்து பார்த்து கொண்டார். சூரி அண்ணாவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன் அவர் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்ல வேண்டும். ராகுல் முதலில் பார்த்தவுடனே நெருங்கி விட்டோம், நிறைய கஷ்டங்களை தாண்டி வந்துள்ளார் அவர் ஜெயிக்க வேண்டும். தம்பி ராமையா அவரும் ஒரு நல்ல பாத்திரம் செய்துள்ளார். இந்தப்படமே ஒரு குடும்பமாக இணைந்து செய்துள்ளோம். மீனாக்‌ஷி மிகவும் அர்ப்பணிப்புடன் நடிக்க கூடியவர் தனது வேலையை சரியாக செய்பவர், சூப்பராக நடித்திருக்கிறார். பிரிகிடாவும் சூப்பராக நடித்திருக்கிறார். இந்த வரவேற்புக்கு உங்களுக்கு நன்றி. உங்கள் அன்பு தான் இங்கு என்னை அழைத்து வந்துள்ளது. வேலன் படம் எனக்கு மிகவும் முக்கியமான படம் இப்படம் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இருக்கும். நன்றி.

Valimai Distributors Kalaimagan Mubarak Velan Audio Launch

இப்படத்தில் மீனாக்‌ஷி கோவிந்தன் நாயகியாகவும் சூரி முக்கிய பாத்திரத்திலும் படம் முழுவதும் வரும் பாத்திரங்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபு, மரியா வின்செண்ட், தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, பிரிஜிடா  ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல மலையாள  மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு  இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலாசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கிறார். K.சரத்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் தொழில்நுட்பக் குழுவில் மகேஷ் மேத்யூ (ஸ்டண்ட்), தினேஷ்-விஜி சதீஷ்-ராதிகா (நடனம்), உமாதேவி-வேல்முருகன்-கலைமகன் முபாரக் (பாடல்கள்), தொழில்நுட்ப குழுவில்  பணியாற்றியுள்ளனர்.

Valimai Distributors Kalaimagan Mubarak Velan Audio Launch

Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், இயக்குநர் கவின் எழுதி, இயக்கியுள்ள “வேலன்” படம் டிசம்பர் 31  உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Distributors Kalaimagan Mubarak Velan Audio Launch

People looking for online information on Biggboss, Kavin, Mugen, Siruthai Siva, Sivakarthikeyan, Soori, Valimai, Velan will find this news story useful.