www.garudabazaar.com

போடு வெடிய!!... கமலுடன் கைகோர்க்கும் ஹிப் ஹாப் ஆதி? BiggBoss நிகழ்ச்சியில் உறுதிசெய்த கமல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா நாயகனாக நடித்துள்ள 'அன்பறிவு' படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

Hip Hop Thamizha anbarivu team Biggboss5 tamil

ஹிப் ஹாப் தமிழா ஆதி, 'மீசைய முறுக்கு', 'நான் சிரித்தால்', 'சிவகுமாரின் சபதம்' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் அன்பறிவு படத்தில் நடித்துள்ளார். ஜனவரி 7-ஆம் தேதி டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் நேர்டியாக வெளியாகவுள்ள இந்த படத்தை அட்லீயிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் ஹிப் ஹாப் ஆதியுடன் நடித்துள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி மற்றும் இயக்குநர் அஸ்வின் ராம் கலந்துகொண்டனர்.

Hip Hop Thamizha anbarivu team Biggboss5 tamil

அப்போது, பிக்பாஸ் அரங்கில் கமல்ஹாசன் பேசும்போது, தயாரிப்பாளர் தியாகராஜனின் முதல் படம்  தனக்கு தேசிய விருது பெற்றுத் தந்ததாக குறிப்பிட்டு நெகிழ்ந்தார். பின்னர் இணையவழியில் நடிகர் நெப்போலியன் கமல் உள்ளிட்ட பிக்பாஸ் அரங்கில் இருந்தவர்களிடம் உரையாடினார். 

இதேபோல் ஹிப் ஹாப் தமிழா ஆதி குறித்து பேசிய கமல், “ஹாலிவுட் உட்பட உலகெங்கும் தனியிசைப் பாடலுக்கு ஒரு தனி இடம் உண்டு. முன்பெல்லாம் நடிப்பதற்கு பாடத் தெரிய வேண்டும்!” என்று கூறினார். மேலும் ஆதியிடம், “அரசியல் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்த வேண்டும். உங்களுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் இருக்கும் தொடர்பை கவனித்து வந்துள்ளேன். எனக்கும் ஜல்லிக்கட்டுக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும்!!” என்றும் குறிப்பிட்டார்.

Hip Hop Thamizha anbarivu team Biggboss5 tamil

அதன் பிறகு பேசிய ஹிப் ஹாப் தமிழா ஆதி, வளர்ந்து கலைஞர்களை கவனித்து, அவர்களை ஊக்குவித்து உறுதுணையாக இருப்பதற்காக கமலுக்கு நன்றி சொல்லி நெகிழ்ந்தார். அதன் பின்னர் அன்பறிவு திரைப்படத்துக்கான டைட்டிலுக்கு, ‘அன்பே சிவம்’ படத்தின் டைட்டில் தான் இன்ஸ்பிரேஷன் என்று இயக்குநர் கமலிடம் தெரிவித்து நெகிழ்ந்தார். 

அதன் பின்னர், பிக்பாஸ் வீட்டாருடன் ஹிப் ஹாப் தமிழா ஆதி உள்பட படக்குழுவினர் பேசினர். அப்போதுதான் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் நடிகர் சஞ்சீவின் உறவுக்காரர் தான் அன்பறிவு திரைப்படத்தின் இயக்குநர் என்றும் தெரியவந்தது. மேலும் ஹிப் ஹாப் தமிழா ஆதி கேட்டுக்கொண்டபடி, அவருடன் இணைந்து ஒரு தனியிசைப் பாடலில் பணிபுரிய கமல் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் அன்பறிவு படத்தின் டிரெய்லர் ஒளிபரப்பப் பட்டது.

Hip Hop Thamizha anbarivu team Biggboss5 tamil

People looking for online information on Anbarivu, Hip Hop Tamizha Adhi, Hip Hop Tamizha Adhi, Hip Hop Thamizha Adhi, Sathya Jyothi Films will find this news story useful.